தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு.. ஆலைகளை மூட வேண்டிய நிலையில் உற்பத்தியாளர்கள்...

Youtube Video

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய நிலைக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 • Share this:
  தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் 300 , அதன் சார்பு தொழிற்சாலைகள் இரண்டாயிரம் என மொத்தம் 2,300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றன. 4 லட்சம் தொழிலாளர்கள் இதன்மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

  இந்தநிலையில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால், தீப்பெட்டி செய்வதற்கான மூலப்பொருட்கள் கிடைப்பதில்லை என்று புகார் எழுந்துள்ளது. குச்சிகளை தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், குளரேட் புதுவையில் இருந்தும், கேசின் குஜராத் மாநிலத்தில் இருந்தும் வரவில்லை என்று உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

  இதனால் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்ட ஆலைகளை மீண்டும் மூடும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். மூலப்பொருட்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தினமும் 3 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெறுவதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு போதிய வேலை வழங்க முடியவில்லை என்றும் கூறுகின்றனர்.  மேலும் விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை என பல்வேறு நெருக்கடியில் தவித்து வருவதாக கூறும் தீப்பெட்டி தொழிலாளர்கள், கடந்தாண்டு ஊரடங்கு காலத்தில் தமிழக அரசு தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணம் வழங்கியது போல இந்தாண்டு 5000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  மேலும் படிக்க... Dindigul Ration shop | திண்டுக்கல்லில் ரேஷன் கடைகளில் ஊழியர்கள் மோசடி.. பொதுமக்கள் புகார்..

  தீப்பெட்டி தொழிலுக்காக வாங்கிய கடனின் வட்டித் தொகையை தள்ளுபடி செய்வதற்கு தமிழக அரசு முன்வரவேண்டும் என்று கூறும் உற்பத்தியாளர்கள், கடனை செலுத்துவதற்கான கால அவகாசத்தினை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர்.

   செய்தியாளர்: மகேஸ்வரன், கோவில்பட்டி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: