தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுபாடு: மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை!

தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் தட்டுபாடு - மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை..

மூலப்பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் அனைத்து கேரளா, கர்நாடகா, புதுச்சேரி குஜராத் மாநிலங்களில் இருந்து வரவேண்டியுள்ளது.

  • Share this:
தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருட்கள் அனைத்தும் வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் முழு ஊரடங்கு காரணமாக மூலப்பொருட்கள் வருவதில் சிரமம் ஏற்பட்டு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி உற்பத்தியை முழுமையாக தொடங்க முடியமால் உற்பத்தியாளர்கள் பரிதவித்து வருகின்றனர். இதனால் மீண்டும் ஆலைகளை மூட வேண்டி சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பும் உள்ளது. மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டினை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கையாக உள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில் தான் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விருதுநகர், தென்காசி, நெல்லை, தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. 300 பகுதி இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதன் சார்பு தொழிற்சாலைகள் 2000 என 2300 தொழிற்சாலைகள் தீப்பெட்டி உற்பத்தி செய்து வருகின்றனர்.

இதனை நம்பி 4 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான குச்சிகளை தயாரிக்க தேவையான மரத்தடிகள் கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், குளரேட் புதுவை மாநிலத்தில் இருந்தும், கேசின் குஜராத் மாநிலத்தில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடக்கு காரணமாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இந்தாண்டு தொடக்கத்தில் தீப்பெட்டியை உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கினாலும், 2வது கொரோனா அலையின் காரணமாக 40 நாள்கள் வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் கடந்த 2ந்தேதி முதல் தீப்பெட்டி ஆலைகள் அரசு விதித்துள்ள விதிமுறைகளின் படி செயல்பட தொடங்கியுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் செயல்பட தொடங்கினாலும் மூலப்பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக மீண்டும் ஆலைகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மூலப்பொருள்கள் அனைத்து கேரளா, கர்நாடகா, புதுச்சேரி குஜராத் மாநிலங்களில் இருந்து வரவேண்டியுள்ளது.

அந்த மாநிலங்களிலும் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் மூலப்பொருள்கள் வருவதில் தடை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கையில் வைத்திருந்த மூலப்பொருள்களை வைத்து தான் தற்பொழுது தீப்பெட்டி உற்பத்தியை உற்பத்தியாளர்கள் தொடங்கியுள்ளனர். மூலப்பொருள்கள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் தற்பொழுது தினமும் 3 முதல் 5 மணி நேரம் தான் தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கள் கையிருப்பில் உள்ள மூலப்பொருள்களை கொண்டு தான் தீப்பெட்டி உற்பத்தியை தொடங்கியுள்ளோம், தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான அனைத்து மூலப்பொருள்களும் வெளி மாநிலங்களில் இருந்து வர வேண்டிய சூழ்நிலை இருப்பதாகவும், மூலப்பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்களுக்கு போதிய வேலை வழங்க முடியவில்லை என்றும்,  முழுநாள் பணி வழங்க முடியமால் குறைவான நேரம் தான் பணி வழங்கி வருகிறது.

மூலப்பொருள்கள் தட்டுப்பாடு இல்லமால் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்தாகவும், தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி மூலப்பொருள்கள் ஏற்றி வரும் வாகனங்களை தடுக்கமால், தங்களுக்கு மூலப்பொருள்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீப்பெட்டி உற்பத்தியை தொடர முடியும் என்றும், இல்லை என்றால் தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அதனை சார்ந்த சார்பு தொழில்களும் பாதிக்கப்படும் என்று கூறுகிறார் தீப்பெட்டி உற்பத்தியாளர் கருப்பசாமி.

Also read: வேலையிழந்த உதவி பேராசிரியர்: கூலிக்கு பனைமரம் ஏறி நுங்கு வெட்டும் போது தவறி விழுந்து உயிரிழந்த சோகம்!!

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு இதை தவிர வேறு வழியில்லை என்றும், மூலப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தங்கள் உரிமையாளர்கள் முழுமையாக வேலை கொடுக்கவில்லை என்றும், தினமு; 3 மணி நேரம் தான் வேலை கொடுப்பதாகவும், இதனால் தங்களது வாழ்வாதரம் இழந்து உள்ளதாகவும், விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை என பல்வேறு நெருக்கடியில் தாங்கள் தவித்து வருவதாகவும், மூலப்பொருள்கள் தட்டுப்பாட்டினை நீக்குவது மட்டுமின்றி, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று வேதனையுடன் கூறுகின்றனர் தீப்பெட்டி தொழிலாளர்கள்

2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக தீப்பெட்டி தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. பலர் வங்கிகளில் கடன் வாங்கி தான் தொழில் செய்து வருகிறோம், கடனுக்கான வட்டி தொகை ஏறிகொண்டு இருக்கிறது. எனவே அரசு வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பது மட்டுமின்ற கடனை செலுத்துவதற்கான தவணை காலஅவகாசத்தினை நீட்டிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்தால் தான் தொழிலாளர்கள் வாழ்வாதரம் சிறக்கும், இது போன்ற உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்ததால் தான் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார் நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம்

தீப்பெட்டி ஆலைகள் இயங்குவதற்கு அரசு அனுமதி கொடுத்தாலும், தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுபாடு இல்லமால் கிடைத்தால் மட்டுமே முழுமையாக தீப்பெட்டி உற்பத்தியை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தொடங்க முடியும். மேலும் கடந்த ஆண்டு ஊரடங்கு காலத்தில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு ரூ. 2ஆயிரம் நிவாரண தொகை வழங்கியது. அதை போன்று தற்பொழுது ரூ 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. தீப்பெட்டி மூலப்பொருள்கள் தட்டுபாட்டினை போக்கி, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: