ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

VK Sasikala: சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வர வேண்டும் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

VK Sasikala: சசிகலா மீண்டும் பொதுச்செயலாளராக வர வேண்டும் - அதிமுக கூட்டத்தில் தீர்மானம்!

 சசிகலா

சசிகலா

சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக வேண்டும் என சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்த சசிசகலா, தற்போது தினந்தோறும் அதிமுக தொண்டர்களிடையே பேசி வருகிறார். அதிமுக தொண்டர்களிடையே அவர் பேசும் தொலைபேசி உரையாடல்கள் நாள்தோறும் வெளியாகி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  சசிகலாவிடம் பேசுபவர்கள் கட்சியில் இருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வந்தாலும் கூட அதிமுகவினர் அதனை கண்டுகொள்வதாக இல்லை. அதே நேரத்தில் பல இடங்களிலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

  அதிமுக தலைமைக்கு சசிகலா புதிய தலைவலியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், விளாத்திகுளத்தில் அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  Also read:   “பிரிக்க முடியாதது எது? திமுகவும் பின்வெட்டும்!” திருவிளையாடல் பட டயலாக்கால் கிண்டலடித்த நத்தம் விஸ்வநாதன்!

  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அதிமுகவின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ரூபம்.கே.வேலவன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

  Also read:  ATM கொள்ளை பற்றிய புதிய தகவல்கள்.. விமானத்தில் வந்து கூகுள் மேப் பார்த்து கொள்ளையடித்தது அம்பலம்!

  இந்த கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா மீண்டும் வர வேண்டும், அதிமுக தொண்டர்களை சசிகலா சந்திக்க இருப்பது வரவேற்கக் கூடியது, சசிகலாவுடன் பேசியவர்களை நீக்கப்படுவது கண்டிக்கதக்கது. சசிகலாவிற்கு எதிராக பேசி வரும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி இல்லங்கள் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த விவகாரம் அதிமுக தலைமைக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்களால் கருதப்படுகிறது.

  Published by:Arun
  First published:

  Tags: ADMK, Politics, Sasikala, Tuticorin, Vilathikulam Constituency, VK Sasikala