தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பீடி இலை கடத்தல்.. 4 தமிழக மீனவர்கள் கைது...

கடத்தப்பட்ட பீடி இலை

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்தி சென்ற நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

 • Share this:
  தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு 5 லட்ச ரூபாய் மதிப்பிலான  பீடி இலையை இலங்கைக்கு படகில் கடத்திச் சென்ற  நான்கு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

  தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன் நாயர் காலனியைச் சேர்ந்த முகமது மைதீன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேகுதலி, கோபுரதான், ஸ்டாலின் மற்றும் தாளமுத்து நகரை சேர்ந்த சார்லஸ் ஆகிய 4 பேரும் சேர்ந்து 5 லட்ச ரூபாய் மதிப்பிலான 1100 கிலோ பீடி இலையை இலங்கைக்கு கடத்திச் சென்றுள்ளனர்.

  அப்போது இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சோதனை செய்தனர். இதில் அவர்கள் 4 பேரும் பீடி இலை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் நான்கு பேரையும் கைது செய்து பீடி இலை மற்றும் படகை பறிமுதல் செய்து இலங்கை கடற்படையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

  மேலும் படிக்க... May Day | பொன்மலை ரயில்வே பணிமனைக்கு இன்று விடுமுறை இல்லை... தொழிலாளர்கள் அதிருப்தி..

  செய்தியாளர்: பி. முரளி கணேஷ், தூத்துக்குடி  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: