கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை: கோவில்பட்டியை சேர்ந்த அண்ணன், தம்பி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை செய்தவர்கள் கைது

ரெம்டெசிவிர் குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்டவிரோதமாக ‘ரெம்டெசிவிர்” குப்பிகளை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்த அண்ணன், தம்பி ஆகிய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேட்டு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு மருந்தகத்தில் கடந்த 13ம் தேதி ரெம்டெசிவிர் மருந்து குப்பிகளை வாங்கி அதை அதிக லாபத்திற்கு விற்பனை செய்த மருந்தக உரிமையாளர்களான கோவில்பட்டி காந்தி நகர் நேரு நகரைச் சேர்ந்த ஆறுமுக நயினார் மகன்களான சண்முகம் (27) மற்றும் அவரது சகோதரர் கணேசன் (29) ஆகியோரை மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 46 ரெம்டெசிவிர் குப்பிகளை கைப்பற்றினர்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரெம்டெசிவிர் குப்பிகளை மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் கள்ளச்சந்தையில் வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உத்தரவிட்டார்.

மேலும் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள  காவல் ஆய்வாளர் சபாபதி அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் அவர்கள் 2பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.

இதையடுத்து அண்ணன் - தம்பி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் பாளையங்கோட்டை சிறையிலடைக்கப்பட்டனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: