Home /News /tamil-nadu /

ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் தூத்துக்குடியில் சிக்கியது.. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததாக தகவல்

ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் தூத்துக்குடியில் சிக்கியது.. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்ததாக தகவல்

தூத்துக்குடியில் பிடிபட்ட செம்மரக்கட்டைகள்

தூத்துக்குடியில் பிடிபட்ட செம்மரக்கட்டைகள்

தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் சந்தைமதிப்பு டன் ஒன்றுக்கு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    தூத்துக்குடியில் ரூ.10 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸார் லாரியுடன் பறிமுதல்  செய்தனர். 

    தூத்துக்குடி புதியம்புத்தூர் காவல் எல்லைக்குட்பட்ட கனரக வாகன யார்டு பகுதியிலிருந்து செம்மரக்கட்டைகள் கடத்த இருப்பதாக தூத்துக்குடி மாவட்ட தனிப்பிரிவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தூத்துக்குடி ஊரக உதவி காவல் கண்காணிப்பாளர்  சந்தீஸ் தலைமையில் தனிப்படை உதவி ஆய்வாளர் நம்பிராஜன்,  காவலர்கள் அருள்முருகன், கலைவாணன் அடங்கிய குழுவினர் குறிப்பிட்ட கனரக லாரி யார்டு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் யார்டு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றில் 20 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    Also Read: வாட்ஸ் அப்பில் பரவிய போட்டோ.. ஷாக்கான உதவி வேளாண்மை பெண் அலுவலர் – மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

    இது தொடர்பான விசாரணையில் கனரக வாகன யார்டு பகுதி உரிமையாளர் தூத்துக்குடி போல்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராகேஷ் என்பதும், செம்மரக்கட்டைகள் கடத்தல் லாரியின் உரிமையாளர் தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது. ராஜேஷ், ராகேஷ் இருவரும் தொழில்ரீதியாக நீண்டகால நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆந்திராவில் இருந்து செம்மரக்கட்டைகளை லாரி மூலம் ராஜேஷ் கடத்தி வந்து தூத்துக்குடியில் ராகேஷுக்கு சொந்தமான யார்டு பகுதியில் பதுக்கி வைத்திருந்து தெரியவந்துள்ளது. கண்டெய்னர் மூலமாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்நிலையில், தற்போது பிடிபட்டுள்ள செம்மரக்கட்டைகள் கப்பலில் ஏற்றுவதற்கு தயாராக இருந்தநிலையில் அதற்குரிய கப்பலில் இடமில்லாததால் யார்டு பகுதியிலேயே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்து செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள செம்மரக்கட்டைகளின் சந்தைமதிப்பு டன் ஒன்றுக்கு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

    Also Read: தண்ணீர் திருட்டில் சிக்கும் விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

    செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பாக புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜேஷ், ராகேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இதன் பிண்ணனியில் உள்ள நபர்கள் யார் யார் என்பது குறித்தும் போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர் : முரளி கணேஷ்  (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், Police, Thoothukudi

    அடுத்த செய்தி