Home /News /tamil-nadu /

கூரியர் வேனில் நூதனமாக ரேஷன் அரிசி கடத்தல்... போலீசை கண்டதும் சிதறி ஓடிய கும்பல்...

கூரியர் வேனில் நூதனமாக ரேஷன் அரிசி கடத்தல்... போலீசை கண்டதும் சிதறி ஓடிய கும்பல்...

 நூதனமாக ரேஷன் அரிசி கடத்தல்

நூதனமாக ரேஷன் அரிசி கடத்தல்

Thoothukudi District : போலீசார் அந்த வேனை நோக்கி செல்லும் போது, வேன் அருகே நின்று கொண்டு இருந்த 4 பேரில் 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பகுதியில் கூரியர் வேனில் நூதனமாக ரேஷன் அரிசி கடத்திய ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 2,750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கூரியர் வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், போலீசார் அங்கு சென்று பார்த்தபோது,  வி.எம். எக்ஸ்பிரஸ் கூரியர் என்று எழுதப்பட்டு இருந்த வேன் ஒன்று நின்று கொண்டு இருந்தது. அதன் அருகில் 4 பேர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டு இருந்தனர்.



    போலீசார் அந்த வேனை நோக்கி செல்லும் போது, வேன் அருகே நின்று கொண்டு இருந்த 4 பேரில் 3 பேர் தப்பியோடி விட்டனர். ஒருவர் மட்டும் போலீசாரிடம் சிக்கி கொண்டார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது கோவில்பட்டியை சேர்ந்த ராமர் பாண்டியன் என்பவரின் மகன் ராஜா என்பதும், கூரியர் வேன் என்ற பெயரை வைத்து கொண்டு வேன் மூலமாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.



    இதையெடுத்து போலீசார் வேனில் சென்று பார்த்த போது அதில் 2750 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் ராஜாவை கைது செய்து, 2750 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன் ஆகியவற்றை பறிமுல் செய்தனர்.

    இதையும் படியுங்கள் : கண்டித்த ஆசிரியரை சினிமா பாணியில் ஆட்களை கூட்டிவந்து மிரட்டிய மாணவன்.. பாதுகாப்பு கோரி ஆசிரியர் போலீசில் புகார்..

    மேலும் தப்பியோடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : மகேஷ்வரன், கோவில்பட்டி
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Thoothukudi

    அடுத்த செய்தி