ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் கனிமொழி எம்பி-யிடம் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த கனிமொழி எம்பி-யிடம் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் தங்களது உரிமைகள், கண்ணியம் காக்க தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அவரிடம் மனுக்களை அளித்தனர்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் துளசி டிரஸ்ட் உரிமையாளர் தனலட்சுமி கூறுகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படக்கூடிய பெண்கள் மீது தொடர்ந்து பல்வேறு வகையில் தாக்குதல்கள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்ட அவர் பெண்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறான பிரச்சாரங்களை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் மனு அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
Also Read: காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு – கார்த்தி சிதம்பரம் சொல்வது என்ன?
இதேபோன்று மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்களும் சமூக ஆர்வலர்களும் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கனிமொழி எம்பியிடம் மனு அளித்தனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் நான்சி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் அரசுக்கு பல்வேறு வகையில் இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றார்.
முன்னதாக பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், சமூக வலைதளங்களில் தங்களை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
முரளி கணேஷ் - செய்தியாளர் , தூத்துக்குடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kanimozhi, Sterlite, Sterlite plant, Thoothukudi Sterlite, Tuticorin