ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

காதலியுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு.. 100 பவுன் கேட்டு காதலன் கறார்.. கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

தூத்துக்குடி

தூத்துக்குடி

Tuticorin : கருவை கலைத்து விடு அல்லது 100 பவுன் நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் - கறார் காட்டும் காதலனால் கண்ணீர் வடிக்கும் கர்ப்பிணி பெண்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்த விட்டு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய முயலும்  காதலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகம் முன்பு தனது தாயுடன் 6 மாத கர்ப்பிணி  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகே உள்ள தலையால்நடந்தான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த காளிரத்தினம் மகள் மகாராணி (25). இவரும், அதேபகுதியைச் சேர்ந்த செல்லப்பா மகன் இசக்கிமுத்து என்பவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமண ஆசைவார்த்தை கூறிய இசக்கிமுத்து, அவருடன் நெருங்கி பழகினார். இதில் மகாராணி கர்ப்பமடைந்தார். இதனைத்தொடர்ந்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இசக்கிமுத்துவிடம் கூறவே அவர், கருவை கலைத்து விட்டால் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாத்திரை கொடுத்ததாக தெரிகிறது. இதில் மகாராணியின் கரு கலைந்தது.

Also Read: கோவை தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி.. பிரபல நடிகரின் சகோதரர் கைது

இதனைத்தொடர்ந்து இருவரும் மீண்டும் நெருங்கி பழகியதால் மகாராணி  மீண்டும் கர்ப்பமடைந்தார். இதுகுறித்து மகாராணி, இசக்கிமுத்துவிடம் கூறிய போது அவர், வழக்கம்போல் கர்ப்பத்தை கலைத்து விடு என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து இசக்கி முத்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இசக்கிமுத்துவின் தாய் இசக்கியம்மாள், தந்தை செல்லப்பா, அவரது சகோதரி இசக்கியம்மாள், அத்தை துர்க்கையம்மாள் ஆகியோர் சேர்ந்து கருவை கலைத்து விடு அல்லது 100 பவுன் நகையுடன் வந்தால் உன்னை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறியதாக தெரிகிறது.

இதுகுறித்து மகாராணி கடந்த மாதம் 24ம்தேதி கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இசக்கிமுத்து உள்ளிட்ட 5 பேரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் இசக்கிமுத்து அவசர, அவசரமாக வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்ளவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, தலைமறைவாக உள்ள இசக்கிமுத்து மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாராணி மற்றும் அவரது தாய் அமுதா ஆகியோர் கோவில்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read:  உல்லாசத்துக்கு மறுத்த கள்ளக்காதலியை கொலை செய்த காதலன் - குன்றத்தூரில் அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து டிஎஸ்பி உதயசூரியன், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து தாய், மகள் இருவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்ட மகாராணி கூறுகையில், பெரியப்பா வீட்டிற்கு செல்லும் போது, செல்போன் கொடு பேசி விட்டு தருகிறேன் என்று இசக்கிமுத்து கேட்டதால், நான் கொடுத்தேன். அதன் பின்னர் என்னுடைய செல்போனுக்கு தொடர்ந்து போன் செய்து தொல்லை கொடுத்து வந்தார், பின்னர் தன்னை காதலிக்க வற்புறுத்தினார் இல்லை என்றால் வீட்டில் உள்ளவர்களை கொன்று விடுவதாக மிரட்டினார்.

தன்னை திருணம் செய்து கொள்வதாக கூறியதை தொடர்ந்து பழகி வந்தேன். இதன் காரணமாக கர்ப்பம் அடைந்தேன், ஆனால் தற்பொழுது திருணம் செய்ய மறுப்பு தெரிவிக்கிறார். கர்ப்பத்தினை கலைத்து விடு என்று இசக்கிமுத்து குடும்பத்தினர் என்னை மிரட்டி வருகின்றனர்.  இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், தனக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது ஏற்கனவே மகாராணி கொடுத்த புகாரின் பெயரில் இசக்கிமுத்து தாய் இசக்கியம்மாள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார். தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாகவும், அவர்களை நெருங்கி விட்டதாகவும், ஒருரிரு நாளில் கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Published by:Ramprasath H
First published:

Tags: Crime News, Love, Love issue, Pregnant, Thoothukudi