சமூக இடைவெளி இல்லாமல் செயல்பட்ட டீ கடைகளை மூட போலீசார் உத்தரவு...!

டீ கடை

காவல்துறையினர் உத்தரவினை மீறி டீ விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அளவுக்கு அதிகமாக சமூக இடைவெளி இல்லமால் செயல்பட்டதால் கோவில்பட்டி நகரில் டீ கடைகளை மூட போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் சமூக இடைவெளி இல்லமால் அதிக மக்கள் கூட்டத்துடன் டீ கடைகள் செயல்பட்டதால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கு நிலை இருப்பதால் கோவில்பட்டியில் டீ கடைகளை செயல்பட போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் அதிகமாக மக்கள் கூட்டத்துடன் டீ விற்பனை செய்த கடைகளுக்கு அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உலகினை அச்சுறுத்தி கொண்டு இருக்கும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு வரும் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கினை அமுல்படுத்தியுள்ளது. காய்கறி, மளிகை மற்றும் அத்தியாசிய பொருள்கள் விற்பனைக்கு மட்டும் காலை 6 மணி முதல் 12 மணிவரை அனுமதி அளித்துள்ளது. அதை போன்று ஹோட்டல், டீ கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியுடன் பார்சல் வழங்க மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கடந்த சில தினங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி அதிகளவில் டீ கடைகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. சமூக இடைவெளி இல்லமால், பலர் முககவசம் அணியமாலும் நீண்ட நேரம் டீ கடைகளில் இருப்பது தெரியவந்தது.

முன்னதாக கோவில்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டீ கடைகளில் மக்கள் கூட்டம் இருப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று பலதரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இன்று கோவில்பட்டி டி.எஸ்.பி. கலைக்கதிரவன் தலைமையிலான போலீசார் சாதரண உடையில் டீகடைகளுக்கு சென்று ஆய்வு நடத்தி விதிகளை மீறி அதிகமான மக்கள் கூட்டத்துடன் டீ விற்பனை செய்த கடைகளுக்கு அபாரதம் விதித்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் கோவில்பட்டி நகரில் டீ கடைகள் செயல்பட காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Also read... மதுரை மின் மயானத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள் ; வைரலாகும் வீடியோ... உண்மை என்ன?

இதையெடுத்து கோவில்பட்டி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் காவல்துறையினர் உத்தரவினை மீறி டீ விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். டீ கடைகள் அடைக்கப்பட்டதால் கோவில்பட்டி நகரில் சற்று மக்கள் கூட்டம் குறைந்த காணப்படுகிறது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் வியாபாரிகள் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: