Home /News /tamil-nadu /

2 வயது பெண் குழந்தை தொட்டிலுடன் சுவற்றில் அடித்துக்கொலை - தாயின் 2வது கணவர் கைது

2 வயது பெண் குழந்தை தொட்டிலுடன் சுவற்றில் அடித்துக்கொலை - தாயின் 2வது கணவர் கைது

டேவிட்

டேவிட்

மனைவி ஸ்டெபீனா மீது சந்தேகப்பட்ட டேவிட் பல நாட்கள் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

  • News18
  • Last Updated :
    தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறு காரணமாக 2 வயது பெண் குழந்தையை தொட்டிலுடன் சுவற்றில் அடித்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி காமராஜ் நகரில் வசித்து வருபவர் டேவிட் பினகாஸ். வெல்டிங் பட்டறையில் வேலை செய்யும் கூலித் தொழிலாளியான இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    இதேபோல தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியிலுள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவா் ஸ்டெபினா. இவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவரை பிரிந்து 5வயது குழந்தை கிறிஸ்டினா 2 வயது குழந்தை கேத்தரீனா உடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

    டேவிட் பினகாஸ், ஸ்டெபீனா இவர்கள் இருவரும் மேட்ரிமோனி மூலமாக பார்த்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.

    இந்த நிலையில் மனைவி ஸ்டெபீனா மீது சந்தேகப்பட்ட டேவிட் பல நாட்கள் மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவும் இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது டேவிட் பினகாஸ் ஆத்திரத்தில் தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்த தனது இரண்டாவது மனைவி ஸ்டெபீனாவின் 2 வயது குழந்தை கேத்தரீனாவை தொட்டிலுடன் பிடித்து சுற்றில் அடித்துள்ளார்.

    Also read... இனி கஞ்சா புகைத்தாலும் வழக்கு பதிவு - காவல்துறை ஐஜி உத்தரவு!

    இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சம்பவ இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தலைமறைவான டேவிட் பினகாஸ்சை புகார் பெற்ற இரண்டு மணி நேரத்தில் டேவிஸ் புரம் சந்திப்பில் வைத்து கைது செய்தனர்.

    செய்தியாளர்: முரளி கணேஷ்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Thoothukudi

    அடுத்த செய்தி