Home /News /tamil-nadu /

மூதாட்டியிடம் நகைபறிப்பு... சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறிச்சுட்டானே என கண்ணீர்

மூதாட்டியிடம் நகைபறிப்பு... சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறிச்சுட்டானே என கண்ணீர்

 மூதாட்டியிடம் நகையை திருடியவர் கைது

மூதாட்டியிடம் நகையை திருடியவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தில் வைய்யம்மாள் என்ற 80வயது மூதாட்டியிடம் நகையை பறித்த பார்த்தசாரதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கோவில் திருவிழாவிற்கு வரி கட்ட மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் கந்தசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மனைவி வைய்யம்மாள் (80). கணவர் இறந்து விட வைய்யம்மாள் தனியாக வசித்து வருகிறார். நேற்று இரவு வைய்யம்மாள் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவினை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த மர்ம நபர் ஒருவர் வைய்யம்மாள் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் தூக்கத்திலிருந்து எழுந்த மூதாட்டி தனது நகையை பறிக்க விடமால் அந்த மர்ம நபரிடம் மல்லுக்கட்டியுள்ளார். இருப்பினும் மூதாட்டி கழுத்தில் இருந்த நகையை விடாமல் அந்த மர்ம நபர் இழுத்துள்ளார். இதில் நகை 2 துண்டாக கீழே விழுந்துள்ளது. ஒரு பாதியை பறித்து கொண்டு அந்த மர்ம நபர் தப்பியோடியுள்ளார்.

இதையெடுத்து மூதாட்டி திருடன், திருடன் என கத்த அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துள்ளனர். மூதாட்டி கழுத்தில் இருந்த பாதி நகை இல்லமால் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மூதாட்டி வைய்யம்மாள் சொன்ன அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த குமரய்யன் மகன் பார்த்தசாரதி (38) என்பவர் வைய்யம்மாளிடம் தங்க நகையை பறித்து சென்றது தெரியவந்தது.

Also read... கிராமத்தில் புகுந்து வீட்டின் கதவை தட்டும் கரடி... அச்சத்தில் மக்கள்

இதனையடுத்து விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு வழக்கு பதிவு செய்து பார்த்தசாரதியை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். முதலில் மறுத்த பார்த்த சாரதி பின்னர் மூதாட்டியிடம் நகையை பறித்ததை ஒப்பக்கொண்டார். இதன் பின்னர் திருடிய நகையை மண்ணில் புதைத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார். பார்த்த சாரதி மண்ணில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்பிலான 1¼ சவரன் தங்க நகையை பறிமுதல் செய்தார்.

கோவில் திருவிழாவிற்கு வரி செலுத்துவதற்கு பணம் இல்லை என்பதால் மூதாட்டியிடம் நகையை திருடியதாக பார்த்த சாரதி போலீசாரிடம் கூறியுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள பார்த்தசாரதி மூதாட்டி வைய்யம்மாள் வீட்டில் கூலி வேலை செய்து வந்தாக கூறப்படுகிறது. மேலும் மூதாட்டிக்கு தேவையான உதவிகளையும் செய்து வந்துள்ளார். மூதாட்டி வைய்யம்மாள் பணம் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவரது வீட்டில் பல நேரம் பார்த்த சாரதிக்கு சாப்பாடும் போட்டுள்ளார். சாப்பாடு போட்ட என்கிட்டயே நகை பறித்து விட்டனே என கண்ணீர் மல்க மூதாட்டி வைய்யம்மாள் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Crime News, Tuticorin

அடுத்த செய்தி