• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ரேசன் கடை மூலம் கருப்பட்டி விற்பனை- அரசின் உத்தரவுக்கு பனைத்தொழிலாளர் சங்கம் நன்றி!

ரேசன் கடை மூலம் கருப்பட்டி விற்பனை- அரசின் உத்தரவுக்கு பனைத்தொழிலாளர் சங்கம் நன்றி!

கருப்பட்டி

கருப்பட்டி

ரேசன் கடை மூலம் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள பனை விவசாயிகள், தனி பதநீர் இறக்கி விற்பனை செய்ய சட்டம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share this:
    கூட்டுறவு கடைகள் மூலம் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பனைத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

    தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக  வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கையை இன்று தமிழக சட்டமன்றத்தில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டில் பனைமர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம் தொடங்கப்படும். 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனைமர கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.  பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாய விலைக்கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும். பனை மரங்கள் வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பனை மரங்களையும் பனை தொழிலாளர்களையும் இதுவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் தற்போதைய வேளாண் பட்ஜெட்டில்  பனைவெல்லம் விற்பனைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பனைத் தொழிலாளர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: தென்னிந்தியாவின் ஜான்சிராணி என காந்தி போற்றிய தியாகி அஞ்சலை அம்மாள்: அரசின் நிதிக்கு ஏங்கி நிற்கும் குடும்பம்!



    இதுகுறித்து  பனைத் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் ராயப்பன் நியூஸ் 18 தமிழ்நாடு ஊடகத்திடம் பேசுகையில்,  கூட்டுறவு கடைகள் மூலம் கருப்பட்டி விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு பனைத் தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பனை மரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி.  30 மாவட்டங்களில் பனை மரம் வளர்க்கப்படும் என்று அறிவித்ததற்கு பாராட்டுக்கள். இந்த மரங்களில் இருந்து தனி பதநீர் இறக்கி விற்பனை செய்ய சட்டம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினால் பனை தொழிலாளர்களின் வாழ்க்கை முன்னேறும் ” என்று கோரிக்கை வைத்தார்.

    செய்தியாளர்: முரளி கணேஷ்- தூத்துக்குடி

    மேலும் படிக்க: வேளாண் பட்ஜெட்டில் பனைத் தொழிலுக்கு முக்கியத்துவம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: