Thoothukudi Sterlite: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்.. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிப்பு.. 

ஸ்டெர்லைட் ஆலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

  • Share this:
    இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஸ்டெர்லைட் ஆலையில் இரண்டாம் நாளாக ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் இயந்திரங்களில் நேற்றிரவு பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கோளாறை சரி செய்யும் பணியில் ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கிய நிலையில், 5000 லிட்டர் ஆக்சிஜன் திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    நேற்று பகலில் உற்பத்தியான ஆக்சிஜனை கோயம்புத்தூர் கொண்டு செல்ல லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இயந்திரங்களில் பழுது காரணமாக இதுவரை உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் மட்டும் லாரி மூலம் கோயம்புத்தூர் அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price | சென்னையில் பெட்ரோல் விலை ரூ.94ஆக உயர்வு.. 

    அரசால் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில், கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் உச்சநீதிமன்ற அனுமதியை அடுத்து மருத்துவரீதியான ஆக்சிஜன் 4 மாதங்களுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: