Home /News /tamil-nadu /

One sided love | ஒருதலைக் காதலால் விபரீதம்.. கண்டித்த அண்ணனுக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பயங்கரம்

One sided love | ஒருதலைக் காதலால் விபரீதம்.. கண்டித்த அண்ணனுக்கு கத்திக்குத்து - தூத்துக்குடியில் பயங்கரம்

தூத்துக்குடி ஒருதலைக் காதல் விபரீதம்

தூத்துக்குடி ஒருதலைக் காதல் விபரீதம்

Attempt Murder | தூத்துக்குடியில் ஒருதலைக்காதல் முன்விரோதம் காரணமாக இளைஞரை கத்தியால் குத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    ஒருதலைக்காதல் முன்விரோதம் காரணமாக சிறுமியின் அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

    தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவா் உலகநாதன் மகன் உதயகுமார் (வயது 19) இவா் தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது தங்கை 17 வயது சிறுமி அருகிலுள்ள மற்றொரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.   இந்த நிலையில் தூத்துக்குடி சக்திவிநாயகர்புரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் முத்துராமன் ( வயது 28) சிறுமியை ஒருதலையாக காதலித்த தோடு தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

    Also Read:  ஆசிரமம் தொடங்கிய சர்ச்சை பெண் சாமியார் அன்னபூரணி..!

    இதையடுத்து சிறுமியின் சகோதரர் உதயகுமார் முத்துராமனை கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டித்துள்ளார் இதனால் உதயகுமாருக்கு முத்துராமனுக்கும் இடையே முன்விரோதம் உருவானது. இந்த நிலையில் இரவு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த உதயகுமாரை முத்துராமன் மற்றும் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர்  கடையை விட்டு வெளியே வரவழைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர் வாக்குவாதம் முற்றிய நிலையில்  முத்துராமன் அவரது நண்பர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து உதயகுமாரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    Also Read:  நடத்தையில் சந்தேகம்.. காதல் மனைவி குத்திக் கொலை.. கோவை ஆட்டோ ஓட்டுநரின் வெறிச்செயல்

    இதையடுத்து பலத்த காயமடைந்த உதயகுமாரை அருகிலுள்ள கடைக்காரர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய பாகம் போலீசார்  சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர் தொடர்ந்து முத்துராமன், ராம்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

    செய்தியாளர்: பி. முரளி கணேஷ் (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Attempt murder case, Crime News, One Sided Love, Tamil News, Thoothukudi

    அடுத்த செய்தி