• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதலித்த பெண்ணை திருமணம் செய்தவரின் தலைவெட்டிக் கொன்ற இளைஞர் - கோவில்பட்டியில் ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்

காதலித்த பெண்ணை திருமணம் செய்தவரின் தலைவெட்டிக் கொன்ற இளைஞர் - கோவில்பட்டியில் ஒருதலைக்காதலால் நடந்த விபரீதம்

கோவில்பட்டி கொலை சம்பவம்

கோவில்பட்டி கொலை சம்பவம்

ஒருதலைக் காதல் விவகாரத்தில் டிவி மெக்கானிக்  தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Share this:
கோவில்பட்டி அருகே டிவி மெக்கானிக்  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளியை 4 மணி நேரத்தில் கைது செய்த போலீஸார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஒரு தலைக்காதல் காரணமாக , தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த டிவி மெக்கானிக் சூரிய ராகவன் என்பவரை தலை துண்டித்து படுகொலை செய்த வழக்கில் சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தினை சேர்;ந்த சுப்புராஜ் என்பவரது மகன் சூரிய ராகவன் (31). இவர் எட்டயபுரத்தில் அரசு மருத்துவமனை அருகே உள்ள உறவினருக்கு சொந்தமான டிவி பழுதுபார்க்கும் கடையில் பணிபுரிந்து வருகிறார். இன்று காலையில் வழக்கம் போல சூரிய ராகவன் கடையில் வேலை பார்த்து கொண்டு இருந்த போது, திடீரென கடைக்கு வந்த மர்ம நபர் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி, தான் கொண்டு வந்த கத்தியால் சூரிய ராகவன் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டார்.

Also Read: திருமணமான மறுநாளே நகை பணத்துடன் மனைவி ஓட்டம் - புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி

இது குறித்த தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று சூரிய ராகவன் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், விளாத்திகுளம் டி.எஸ்.பி. பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்தினை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சூரிய ராகவனை கொலை செய்து விட்டு தப்பியோடியது சோழபுரத்தினை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் ஆனந்தராஜ்(22) என்பது தெரியவந்தது.

படுகொலை செய்யப்பட்ட சூரிய ராகவனுக்கும், படர்ந்தபுளி கிராமத்தினை சேர்ந்த மகாலெட்சுமிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பட்டதாரியான மகாலெட்சுமி, சூரிய ராகவன் கடையின் அருகேயுள்ள டைப்பிஸ்ட் இன்ஸ்டியூட்டிற்கு வந்த போது பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவாகரம் இரு வீட்டருக்கும் தெரிய வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு சமூகத்தினை சேர்ந்தவர்கள் என்பது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கிடையில் பெற்றோர்களின் எதிர்ப்பினையும் மீறி சூரிய ராகவன், மகாலெட்சுமி இருவரும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

Also Read:  உறவுக்கார பெண்ணுடன் கள்ளத்தொடர்பு..போட்டியாக வந்த ரவுடி வெட்டிக்கொலை - தந்தை மகன் கைது

சூரிய ராகவனை கொலை செய்த சோழபுரத்தினை சேர்ந்த ஆனந்தராஜ் கேட்டரிங் முடித்து விட்டு, விழாக்களுக்கு சமையல் செய்வது, கோவில் திருவிழாக்களில் ஆடு வெட்டுவது போன்ற பணிகளை செய்து வருகிறார். சூரிய ராகவன், மகாலெட்சுமியை காதலிக்கும் போது, ஆனந்தராஜ்வும் மகாலெட்சுமியை காதலித்துள்ளார். ஆனால் மகாலெட்சுமி தான் சூரிய ராகவனை காதலிப்பதாக தெரிவித்துவிட்டார்.

ஒரு சமூகத்தினை சேர்ந்த தன்னை காதலிக்கமால் மற்றொரு சமூகத்தினை சேர்ந்த சூரிய ராகவனை காதலித்து வந்தால், ஆனந்த்ராஜ்க்கு மகாலெட்சுமி மற்றும் சூரிய ராகவன் மேல் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில் சூரிய ராகவன் மற்றும் மகாலெட்சுமி இருவரும் திருமணம் செய்து கொண்டது ஆனந்தராஜ்க்கும் மேலும் ஆத்திரத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சூரிய ராகவனை கொலை செய்ய வேண்டும் என்று ஆனந்தராஜ் திட்டம் திட்டியுள்ளார்.

அதன்படி பழுதான எல்.இ.டி டிவி ஒன்றை பழுது பார்க்க, சூரிய ராகவன் வேலை பார்த்த கடையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆனந்த்ராஜ் கொடுத்துள்ளார். மேலும் தினமும் டிவி வேலை பார்த்தாச்சா என்று  சூரிய ராகவனிடம், போனில் ஆனந்த்ராஜ் கேட்டு வந்துள்ளார். நேற்றுமுன்தினம் கேட்ட போது நாளை டிவி ரெடியாகி விட்டது நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சூரிய ராகவன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தான் திட்டமிட்ட படி ஆனந்தராஜ் ஒரு கட்டை பையில் தான் ஆடு வெட்ட கொண்டு செல்லும் கத்தி, மிளாகாய் பொடி ஆகியவற்றை கொண்டு வந்துள்ளார். டிவி வாங்குவதற்கு முன்பு, தான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்தாய் என்று கூறி ஆனந்தராஜ், சூரிய ராகவனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு வாதம் முற்றவே தான் கொண்டு வந்த மிளாகாய் பொடியை சூரிய ராகவன் முகத்தில்  வீசி விட்டு கத்தியை கொண்டு தலையை துண்டித்த ஆன்ந்தராஜ், தலையை மட்டும் கையில் பிடித்தவாறு சுற்றி பார்த்து விட்டு அருகில் வீசி விட்டு தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: