ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை - திமுக எம்.பி.கனிமொழி
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை - திமுக எம்.பி.கனிமொழி
கனிமொழி எம்.பி
ஆக்சிஜன் தேவை இல்லை என்பதை தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது எனவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனி மேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் நகரப் பேருந்து சேவையை தூத்துக்குடி தொகுதி எம்பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் அதே பேருந்தில் இருவரும் சிறிது தூரம் பயணம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, முதல்வர் ஸ்டாலின் மக்களுக்குத் தந்த வாக்குறுதி நிச்சயமாக ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது. கடந்த ஆட்சியில் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் பிளான்ட் மட்டும் திறக்கப்பட்டு ஆக்சிஜனை உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலை தருகிறேன் என்று சொன்ன அளவிலான ஆக்ஸிஜன் தர முடியாவிட்டாலும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து வழங்கப்பட்டது.
கனிமொழி
இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஆக்சிஜன் தேவை இல்லை என்பதை தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்து வைத்துள்ளது எனவே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை இனிமேலும் நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழக மக்களுக்கு தேவையான ஆக்சிஜன் வழங்க புதிதாக ஆங்காங்கே சிறிய சிறிய அளவில் ஆக்ஸிஜன் பிராண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜன் வாங்கும் வாய்ப்பும் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது அப்படிப்பட்ட ஒரு மோசமான நிலை இனி மறுபடியும் வராது.
Also Read: ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக வழக்கறிஞரை சிறையில் தள்ளிய பெண்.. திடீர் திருப்பமாக உறவினர்கள் சொன்ன அதிர்ச்சி சம்பவம்
தற்போது கேரளாவில் மூன்றாவது அலைக்கான அறிகுறி தெரியும் பொழுதே தமிழகத்தில் அதற்கான நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்கத் தொடங்கி விட்டார் என்றாா்.
தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க-வினர் நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர் 10 ஆண்டுகளில் அ.தி.மு.க-வால் செய்ய முடியாததை 100 நாட்களுக்கு உள்ளாக முதல்வர் ஸ்டாலின் செய்து விட்டார் அந்த காழ்ப்புணர்ச்சியால் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர்: பி. முரளி கணேஷ் (தூத்துக்குடி)
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.