தேசிய வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு கடம்பூர் செ.ராஜூ பாராட்டு
தேசிய வில்வித்தை போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு கடம்பூர் செ.ராஜூ பாராட்டு
பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
Thoothukudi District : வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற 12வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த மாணவர்களை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான 12 வது தேசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி ரெய்க்காட் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழக அணியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 8 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 10 வயதிற்குட்பட்ட பிரிவில் ஹவிஷா என்ற மாணவி முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், சக்தி மீனாட்சி ஜாஸ்மின், மற்றும் யோஜித், இரண்டாமிடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தையும், சக்திமணிகர்ணிகா என்ற மாணவி மூன்றாம் இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மேலும் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும் 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் 4 மாணவர்கள் போட்டியில் கலந்துகொண்டு சான்றிதழ்களையும் பெற்றனர். வில்வித்தை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி மாணவ-மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மேலும் பல்வேறு சாதனைகளை செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், வில்வித்தை பயிற்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.