• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றி ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கொலை!

காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றி ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய வாலிபர் கொலை!

crime

crime

காஞ்சிபுரம் முருகன், அமுதா முகநூல் பக்கத்தில் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்ட போது பெண் குரல் கேட்க, தன்னுடன் ஒரு பெண் பேசுவதாக நினைத்து தினமும் மணிக்கணக்கில் பேச தொடங்கியுள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 2 ஆண்டுகளாக காதலிப்பதாக பெண் குரலில் ஏமாற்றியது மட்டுமின்றி, ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய மேலஈரால் முருகன் என்பவரை மதுவில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காஞ்சிபுரத்தினை சேர்ந்த முருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கரந்தை சுடுகாட்டு அருகில் உள்ள காட்டு பகுதியில் கடந்த 15ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக மாசார்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து போலீசார் விரைந்து சென்று உடலைக்கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த ஆண் சடலம் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்து கிடந்து மேலஈரால் கிராமத்தினை சேர்ந்த பால்ராஜ் மகன் முருகன் (28) என்பது தெரியவந்தது. முருகன் சடலம் அருகில் கிடந்த மது பாட்டில், தண்ணீர் பாட்டில் ஆகிய பொருட்கள் கிடந்த நிலையில், முருகன் தலையில் அடிபட்டு இருந்த காரணத்தினால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கருதிய போலீசார், சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பெயரில், விளாத்திகுளம் டி.எஸ்.பி.பிரகாஷ் மேற்பார்வையில் மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கோகிலா,  உதவி ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை தொடங்கினார்.

எட்டயபுரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவினை ஆய்வு செய்ததில், சடலமாக கிடந்த முருகனுடன் ஒரு நபர் சென்றது தெரியவந்தது. மேலும் முருகன் செல்போனை கைப்பற்றி அதனை ஆய்வு செய்த போது, ஒரு நம்பரில் இருந்து முருகன் போனுக்கு அடிக்கடி போன் வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த போன் நம்பரை போலீசார் ஆய்வு செய்த போது அந்த நம்பர் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மாயண்டி மகன் முருகன் (24) என்பது தெரியவந்தது.

Also Read: இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

இதையடுத்து போலீசார் காஞ்சிபுரம் முருகன் குறித்து விசாரனை நடத்த தொடங்கினார். இந்த நிலையில் கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு நேற்று காஞ்சிபுரத்தில் இருந்து முருகன், சம்பவத்தின் போது வீட்டுச் சென்ற மணிபார்சினை எடுக்க வந்த போது போலீசார் அவரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, சடலமாக கிடந்த முருகனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் ஏன் கொலை செய்தான் என்று அவர் கூறிய காரணத்தினை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த முருகன், 12ம் வகுப்பு வரை படித்து விட்டு அங்குள்ள வாகனங்களுக்கான கூலிங் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் முருகன் முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் குறுச்செய்தி வந்துள்ளது. இதையடுத்து முருகனும், அந்த அமுதா என்ற பெயர் கொண்ட முக நூல் பக்கத்தில் குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கியுள்ளார். நாளடைவில் இருவரும் தங்களது செல் நம்பரை பரிமாறி பேச தொடங்கியுள்ளனார்.

காஞ்சிபுரம் முருகன், அமுதா முகநூல் பக்கத்தில் கொடுத்த செல்போன் நம்பரில் தொடர்பு கொண்ட போது பெண் குரல் கேட்க, தன்னுடன் ஒரு பெண் பேசுவதாக நினைத்து தினமும் மணிக்கணக்கில் பேச தொடங்கியுள்ளார். பின்னர் இருவரும் தங்களது புகைப்படத்தினையும் பகிர்ந்து கொண்டனர்.பெண்குரலில் பேசிய செல்போனில் இருந்து அனுப்பி பெண் புகைப்படத்தினை பார்த்த காஞ்சிபுரம் முருகன் தான் காதலிப்பதாக கூற, அந்த பெண்குரலும் காதலிப்பதாக கூற இருவரும் காதலை வளர்த்துள்ளனர். தங்களது குடும்பங்கள், தங்கள ரகசியங்களையும் பரிமாறிக்கொண்டுள்ளனர்.

Also Read:அமரிந்தர் சிங் ராஜினாமா செய்வதாக கூறிய போது சோனியா காந்தி கூறியது என்ன?

தான் காதலிக்கும் பெண்ணை நேரில் பார்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் முருகன் கேட்க, அந்த பெண்குரலில் பேசிய நபரும் சரி என்று சொல்ல இந்தாண்டு பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். முடிவின் படி 14ந்தேதி காஞ்சிபுரத்தில் இருந்து முருகன் தனது காதலியை ஆவலோடு பார்க்க வந்த போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் காதலித்தது பெண் அல்ல அது ஆண் என்று தெரியவந்தது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பெண் குரலில் பேசி ஏமாற்றி வந்தது காஞ்சிபுரம் முருகனுக்கு தெரியவந்துள்ளது.

மேலும் பெண்குரலில் பேசி கடந்த 2 ஆண்டுகளாக தன்னை ஏமாற்றியது மேலஈரால் கிராமத்தினை சேர்ந்த முருகன் என்பது தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் காஞச்சிபுரம் முருகனை, கொலை செய்யப்பட்ட முருகன் சமதானப்படுத்தியது மட்டுமின்றி, அங்குள்ள கழிவறை பகுதியில் ஒரினசேர்க்கையில் ஈடுபட வைத்துள்ளார். அது மட்டுமின்றி அதனை கொலை செய்யப்பட்ட முருகன், காஞ்சிபுரம் முருகனுக்கு தெரியமால் வீடீயோ எடுத்துள்ளார்.

Also Read:   ‘அவமதிக்கப்பட்டேன்’ – முதல்வர் பதவி விலகலுக்கு அமரீந்தர் சிங் சொன்ன காரணம்!

இதற்கிடையில் காஞ்சிபுரம் முருகன் ஊருக்கு சென்றது மட்டுமின்றி, தன்னுடைய மொபைல் போன் நம்பரை மாற்றி விட்டு, புதிய நம்பர் போட்டுள்ளனர். கொலை செய்யப்பட்ட மேலஈரால் முருகன், காஞ்சிபுரம் முருகனின் தாய் மற்றும் தங்கையிடம் பேசி முருகன் நம்பரை வாங்கி பேசியுள்ளார். அப்போது தன்னிடம் இருவரும் ஒரினசேர்க்கை மேற்கொண்ட வீடியோ உள்ளதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும், மேலும் ஒரின சேர்க்கைக்கு வர வேண்டும் என்றும், வரவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வளைதளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சிபுரம் முருகன், அந்த வீடியோவை அழித்துவிடும் படி கெஞ்சியுள்ளார். ஆனால் கொலை செய்யப்பட்ட முருகன் மறுத்துள்ளார். 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காஞ்சிபுரம் முருகன், எப்படியவாது வீடியோவை அழிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து, கடந்த 14ந்தேதி காஞ்சிபுரத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு வந்துள்ளார். மேலும் தான் வருவதை கொலை செய்யப்பட்ட முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து முருகன் எட்டயபுரம் பஸ் நிலையத்தில் காத்திருந்து காஞ்சிபுரத்தில் இருந்த முருகனை வரவேற்று, இருவரும் கோவில்பட்டியில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர்.

ஆனால் அங்குள்ள தியேட்டர் மூடப்பட்டு இருந்த காரணத்தினால் மீண்டும் இருவரும் எட்டயபுரத்திற்கு வந்து மது மற்றும் குளிர்பானம் வாங்கி விட்டு, மேலக்கரந்தை பகுதிக்கு வந்துள்ளனர். ஏற்கனவே காஞ்சிபுரம் முருகன், மேலஈரால் முருகனை மயக்கமடை வைப்பதற்காக கொண்டு வந்த விஷத்தினை குளிர்பானத்தில் கலந்து, மதுவில் ஊற்றி கொலை செய்யப்பட்ட மேல ஈரால் முருகனுக்கு கொடுத்துள்ளார். இதனை குடித்ததும் கொலை செய்யப்பட்ட முருகனுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த மயக்கத்திலும் காஞ்சிபுரம் முருகனை ஒரினசேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. விஷம் கலந்த மதுவினை குடித்த காரணத்தினால் கொலை செய்யப்பட்ட முருகன் வாந்தி எடுத்து கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த காஞ்சிபுரம் முருகன், அருகில் உள்ள கல்லை எடுத்து  முருகனின் தலையில் போட்டு விட்டு தப்பியோடியுள்ளார். இதில் மேலஈரால் முருகன் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட மேலஈரால் முருகன் 10வகுப்பு வரை படித்துள்ளார். அவர் தனது தந்தையுடன் விவசாயத்தினை பார்த்து வந்த நிலையில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அடிக்கடி செல்போனில் பேசி வந்ததும், மேலும் தன்னுடைய காதலியை பார்க்க போவதாக அடிக்கடி வெளியே சென்று வந்ததும், மேலும் அவருடைய குரல் சற்று மெல்லிய குரலாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

செல் போனில் உள்ள ஆப் மூலமாக தன்னுடைய குரலை  பெண் குரலாக மாற்றி காஞ்சிபுரம் முருகனை ஏமாற்றியது மட்டுமின்றி, ஒரின சேர்க்கை வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் அந்த வீடியோவை அழிக்க வேண்டும் முயற்சியில் மேலஈரால் முருகனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: