மிஸ்ட்கால் சகோதரன்.. திடீர் காதலன் - இளம்பெண் புகாரால் காதல் மன்னன் கம்பி எண்ணும் பரிதாபம்

தூத்துக்குடி மிஸ்ட்கால் விவகாரம்

பாசமலர் என்று பொங்கி வழிந்து காதல் மன்னனாக மாற முயன்ற மஞ்சுநாதன் தற்பொழுது கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்.

  • Share this:
திருமணம் செய்ய டார்ச்சர் செய்த மிஸ்டுகால் சகோதரன் மீது இளம்பெண் கொடுத்த புகாரையடுத்து அவர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பகுதியில் மிஸ்டுகால் மூலமாக பாசமலர் சகோதரனாக மாறியவர், இளம் பெண்னை திருமணம் செய்ய வலியுறுத்தி டார்ச்சர் செய்துள்ளார். அதற்கு அந்த இளம்பெண் மறுக்கவே, ஆத்திரத்தில் அந்த இளம்பெண்ணின் புகைப்படத்தை பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல்,  முகநூலில்  அவதூறாக பதிவேற்றம் செய்த காரணத்தினால் போலீசார் வாலிபரை அலேக்காக தூக்கி சிறையில் அடைத்துள்ளனர்.

Also Read:  ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் - மகிழ்ச்சியில் 1 டன் தக்காளியை மக்களுக்கு அள்ளிக்கொடுத்த வியாபாரி

கிருஷ்ணகிரி மாவட்டம், கங்காபிரம்பட்டி பட்டையூரைச் சேர்ந்த ராஜா மகன் மஞ்சுநாதன் (28) என்பவர், செல்போனில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கும்போது தவறுதலாக தூத்துக்குடி மாவட்டம், எட்டயாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமணமான இளம்பெண்ணுக்கு செல்போன் அழைப்பு விடுத்து பேசியுள்ளார். தன்னை தவறாக அழைத்துள்ளீர்கள் என்று அந்த பெண் கூற, தவறாக தான் அழைத்து விட்டேன். இருந்தாலும் தங்களிடம் பேசியது ஒரு சகோதரியிடம் பேசியது போன்று இருப்பதாக கூறி மஞ்சாநாதன் பேச தொடங்கியுள்ளார். முகம் தெரியாத ஒருவர் தன்னை சகோதரி என்று அழைத்த காரணத்தினால் அந்த இளம்பெண்ணும் பேச தொடங்கியுள்ளார்.

Also Read:  கடலூரில் ஒரு தலையாக காதலித்த இளைஞர் திருமணம் செய்யக் கோரி மிரட்டியதால் 16 வயது சிறுமி தற்கொலை

தினமும் காலை வணக்கம் தொடங்கி இரவு தூங்கும் வரை அடிக்கடி அந்த இளம் பெண்ணை மஞ்சுநாதன் தொடர்பு கொண்டு அன்றை சமையல் முதல் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பேசுவதும், அந்த பெண்ணிற்கு ஒரு சகோதரன் போன்று அறிவுரைகள் கூறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். பாசமலர் சகோதரன், சகோதரியாக சில வாரங்கள் செல்போன் மூலமாக இருவரும் பேசியுள்ளனர். மேலும் அந்த பெண்ணின் குடும்ப சூழ்நிலை குறித்து நன்கு அறிந்து கொண்ட மஞ்சுநாதன், பெண்ணின் முகத்தினை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன்னிடம் சாதரண போன் தான் இருப்பதாக அந்த பெண் கூற, அட அட தன் சகோதரியிடம் ஆண்ட்ராய்டு போன் இல்லையா என்று வேதனை அடைந்த பாசமலர் சகோதரன் மஞ்சுநாதன், கடந்த மார்ச் மாதம் புதிய ஆண்ட்ராய்டு போனுடன் சகோதிரியை பார்க்க, எட்டயபுரம் பகுதிக்கு வந்த மஞ்சுநாதன், சகோதிரியிடம் புதிய ஆண்ட்ராய்டு செல்போனை வழங்கியது மட்டுமின்றி அதன் செயல்பாடுகளையும் சொல்லி கொடுத்து, வாட்ஸ் அப், பேஸ்புக் பயன்பாடுகள் குறித்து சொல்லி கொடுத்துள்ளார்.

செல்போனை பெற்றுக்கொண்ட அந்தப் பெண், தனது அடையாள அட்டையை பயன்படுத்தி புதிய செல்போன் எண் பெற்று, அதன் மூலம் மேற்படி ஆண்ட்ராய்டு செல்போனில் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வந்துள்ளார். தினமும் இருவரும் வீடியோ காலில் பேச தொடங்கியுள்ளனர்.

தொடக்கத்தில் பாசமலர் சகோதரனாக பேசி வந்த மஞ்சுநாதன் நாளடைவில் காதல் மன்னன் போல பேச தொடங்கியது மட்டுமின்றி, அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுப்பு தெரிவித்து, இனிமேல் நான் உன்னிடம் பேசமாட்டேன் என்று கூறியதால், ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் கடந்த ஏப்ரல் மாதத்தில், தான் வாங்கிக் கொடுத்த செல்போனை அந்தப் பெண்ணிடம் திரும்பத் தருமாறு கூறியுள்ளார்.

உடனடியாக அந்தப் பெண்ணும், தான்  பயன்படுத்தி வந்த சிம்கார்டு மற்றும் அதிலிருந்த தகவல்களை அழிக்காமல் செல்போனை அப்படியே திருப்பிக் கொடுத்துவிட்டார். இதனை திரும்ப பெற்றுச் சென்ற மஞ்சுநாதன், சில நாட்களில் அந்த செல்போன் மூலம், அந்தப் பெண்ணின் முகநூலில் இருந்து, அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து, அந்தப் பெண்ணே ஆண்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பதாக மஞ்சுநாதன் பதிவேற்றம் செய்துள்ளார். அதே போன்று அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்து பாலியியல் தொழிலுக்கு அழைப்பது போல் வாட்ஸ் ஆப்பிலும் அனுப்பியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதையெடுத்து குடும்பத்தினர் ஆலோசனையின் படி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் இளம்பெண் புகார் அளித்துள்ளார். அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாதனை கைது செய்து சிறையிலடைத்தனர்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: