• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைச்சரும், அதிமுக பிரமுகரும்!

கொலை முயற்சி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான திமுக அமைச்சரும், அதிமுக பிரமுகரும்!

அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன்,

அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன்,

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட  அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரும் ஆஜரானார்.

  • Share this:
    கொலை முயற்சி வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  ஆஜரானார். இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் திமுக நகர செயலாளர் சுரேஷ் கொலை முயற்சி வழக்கில் 4வது குற்றவாளியாக  அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  சேர்க்கப்பட்டு  கைதாகி பின்னர்  ஜாமீனில் வெளியே வந்தார்.

    தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று (11ம் தேதி) இறுதி விசாரணைக்காக சம்பந்தப்பட்ட அனைவரும் ஆஜாராகும்படி தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அதன்படி இன்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  நீதிமன்றத்திற்கு வந்து, முதன்மை மாவட்ட நீதிபதி தங்க மாரியப்பன் முன்னிலையில் ஆஜரானார்.

    Also Read: பாஜகவில் சேர்ந்த ஒரே வாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ!

    இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட  அதிமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் என்பவரும் ஆஜரானார். அதிமுக மற்றும் திமுக இரண்டு கட்சி நபர்களும் ஓரே வழக்கிற்காக ஆஜரானதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணன்,


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதையொட்டி நீதிமன்ற வளாகத்தில் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி கோபி, டவுண் டிஎஸ்பி கணேஷ், தென்பாகம் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு வரும் மக்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.

    முரளி கணேஷ், செய்தியாளர் - தூத்துக்குடி

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Arun
    First published: