முகப்பு /செய்தி /தமிழ்நாடு / துரை வைகோவுக்கு கட்சியில் மாநில அளவிலான பொறுப்பு - மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

துரை வைகோவுக்கு கட்சியில் மாநில அளவிலான பொறுப்பு - மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

மதிமுக கூட்டம்

மதிமுக கூட்டம்

துரை வைகோவிற்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும்  என மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

  • 1-MIN READ
  • Last Updated :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோவிற்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டியில் உள்ள சௌபாக்யா மஹாலில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதிமுக வடக்கு மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயக ரமேஷ் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மதிமுகவிற்காக தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்க்கொண்டு, பம்மபரமாக பணியாற்றி மதிமுக அனைத்து வேட்பாளர்களை வெற்றி பெற செய்யத துரைவைகோவிற்கு நன்றி தெரிவித்து கொள்வது.

மேலும் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றி மதிமுக வடக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்து கொள்வது, 56 ஆண்டுகால பொதுவாழ்வில் மக்கள் பணியாற்றி வரும் மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோவின் பணிசுமையை குறைக்கும் வகையில் துரைவைகோவை மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் அல்லது பொருளாளர் பதவி தர  வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் மதிமுக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவின் போது மதிமுக பொதுச்செயலாளர் நமது நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை, தனக்கு தெரியமால் கட்சி நிர்வாகிகள் தனது மகனை கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். இருப்பினம் மதிமுக ஜனநாய கட்சி என்றும், எதுவாக இருந்தாலும் தொண்டர்களின் முடிவு தான் என்றும் தெரிவித்து இருந்த நிலையில் இன்றைக்கு கோவில்பட்டியில் மதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துரைவைகோவிற்கு பதவி வழங்க தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் 20ந்தேதி நடக்கவுள்ள மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் துரைவைகோவிற்கு பதவி வழங்க வலியுறுத்தப்படும் என்றும் மதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: MDMK, Mdmk leader vaiko, Politics, Tamilnadu, Vaiko