தமிழகத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு தீப்பெட்டி விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.
மேலும் தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர். இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
Also Read: அரசு மருத்துவரின் அத்துமீறல்.. சொல்லில் அடங்கா துயரம் - கடிவாளம் போட்ட செவிலியர்கள்
கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410ல் இருந்து ரூபாய் 850-ஆக உயர்ந்துள்ளது.இதே போன்று மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ 82ம், அட்டை 42 ரூபாயில் இருந்து ரூபாய் 55-ஆக உயர்ந்துள்ளது.
Also Read: அன்வர் ராஜாவின் அடுத்த மூவ் என்ன?
இது தவிர பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகையால் தீப்பெட்டி விலையை ரூ.1ல் இருந்து ரூ.2ஆக தீப்பெட்டி விலையை உயர்த்துவது என உற்பத்தியாளர்கள் முடிவு செய்து டிசம்பர் 1-ஆம் தேதி முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தனர். அதன்படி இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fire crackers, Sivakasi, Tamil News, Tamilnadu, Thoothukudi