• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்!!

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்!!

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்!!

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயம் - பரிதவித்து நிற்கும் குடும்பம்!!

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தவர் மாயமடைந்ததை தொடர்ந்து, அவரது குடும்பம் செய்வதறியாது பரிதவித்து நிற்கிறது.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் கம்பத்துபட்டி கிராமத்தினை சேர்ந்த பாண்டிச்சாமி என்பவரது மகன் வீரசின்னு(36), இவருக்கும் பாக்கியம் (32) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, இந்த தம்பதிக்கு வினித்(10), வினிதா(9) 2 குழந்தைகள் உள்ளன. தொடக்கத்தில் விவசாய பணிகள் ஈடுபட்டு வந்த வீரசின்னு, கொத்த வேலை பார்த்து வந்துள்ளார். போதிய வருமானம் கிடைக்கவில்லை என்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கொத்தனர் வேலைக்கு சென்றுள்ளார்.

பணிக்கு சென்று 2 ஆண்டுகள் ஒப்பந்த பணி முடிவடைந்த நிலையில் ஊருக்கு வந்தவர் விடுமுறை முடிந்து மீண்டும் 2 ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துபாய்க்கு சென்றுள்ளார். 23 மாதங்கள் பணியாற்றிய நிலையில், மீதம் ஒரு மாதம் இருக்கும் நிலையில் கடந்த வாரம் மனைவியிடம் பேசுகையில் 20ம் தேதி ஊருக்கு திரும்ப உள்ளதாகவும், அதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் இறங்கி பின்னர் ஊருக்கு வர உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

இதையெடுத்து வீரசின்னு உறவினர்கள் அவரை அழைத்து வர சென்றுள்ளனர். 20ந்தேதி 7.30மணிக்கு தனது மனைவியிடம் பேசிய வீரசின்னு சார்ஜா விமான நிலையத்தில் இருப்பதாகவும், கொரோனா பரிசோதனை செய்து, நெகடிவ் என்று முடிவு வந்துவிட்டதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் விமானம் கிளம்பிவிடும் என்றும், 11.20 மணிக்கு விமானம் சென்னை வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவருடன் பணியாற்றும் ஊழியர் ஒருவரும் விமானம் கிளம்பியதும், அவர் வீரசின்னு மனைவி பாக்கியத்தினை தொடர்பு கொண்டு, வீரசின்னு விமானத்தில் ஏறி கிளம்பி விட்டதாக கூறியுள்ளனர். சென்னை விமானநிலையத்திற்கு வீரசின்னு கூறிய விமானம் வந்த பின்னர் அவர் வரவில்லை என்பதால் அவரை அழைத்து வர சென்ற உறவினர்கள் வெகுநேரம் காத்திருந்தும் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றுள்ளனர். அவருடைய உறவினர்கள் மற்றும் மனைவி, வீரசின்னு செல்போனிற்கு தொடர்பு கொண்ட போதும் அவருடைய போன் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடையந்தனர்.

வீரசின்னுவை விமானத்தில் விமானம் ஏற்றி அவருடன் பணியாற்றும் ஊழியருடன் கேட்ட போது அவர் தற்பொழுது சென்னை வந்து இருக்க வேண்டும், தானும் தொடர்பு கொண்ட போது அவருடை போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீரசின்னு மனைவி பாக்கியம் மற்றும் அவரது உறவினர்கள் புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமானம் ஏறும் போது தனது கணவரும், அவருடன் பணியாற்றும் ஊழியரும் போன் செய்ததாகவும், தனது கணவர் சென்னை வந்துவிடுவார் என்று அவரை அழைத்து வர உறவினர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் தற்பொழுது வரை வரவில்லை என்றும், விமான நிலையத்தில் கேட்டால் அவர் வெளியே சென்று விட்டார் என்று கூறியுள்ளதாகவும், தன்னுடைய கணவரை கண்டுபிடித்து தர வேண்டும் இல்லை என்றால், தானும் தனது குழ்நதைகளும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கண்ணீருடன் கூறுகின்றார் வீரசின்னு மனைவி பாக்கியம்.

இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது புகார் வந்துள்ளது, விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.

தனது கணவர் வந்துவிடுவார் என்று மனைவியும், தந்தை வந்துவிடுவார் என்று குழந்தைகளும் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் விமானம் ஏறியவர் தற்பொழுது வரை வீடு திரும்பவில்லை என்பதால் அந்த குடும்பம் மட்டுமின்றி, அந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: