தூத்துக்குடியில் மது போதையில் சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்... பொதுமக்கள் சாலை மறியல்
தூத்துக்குடியில் மது போதையில் சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்... பொதுமக்கள் சாலை மறியல்
மது போதையில் சொந்த குடிசை வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்
மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற பெயரில் தேவராஜ் தங்களுக்கு பல்வேறு தொந்தரவு கொடுத்து வருவதாகவும், தேவராஜை கைது செய்ய வலியுறுத்தி பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து போலீசார் தேவராஜை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் சிலுவைபுரத்தில் மது போதையில் தனது சொந்த குடிசை வீட்டிற்கு தேவராஜ் என்ற இளைஞர் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார் சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியின் மகன் தேவராஜ். மதியழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது தாய்வுடன் தேவராஜ் வசித்து வருகிறார். சற்று மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் தேவராஜ், மது அருந்தி விட்டு அடிக்கடி அப்பகுதி மக்களுக்கு பல்வேறு வகையில் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்ற பெயரில் தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் இருந்த தேவராஜ் குடியிருந்து வரும் குடிசைக்கு தீ வைத்தாக தெரிகிறது. இதனால் மளமள குடிசையில் தீ பற்றி எரிந்தது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்து மட்டுமின்றி, பொது மக்களும் தீயணைப்பு துறையினருடன் இணைந்து தீயை அணைத்தனர்.
நல்வாய்ப்பாக தேவராஜ் தாய் மாரியம்மாள் வெளியே சென்றதால் உயிர்தப்பினர். இதனால் ஆத்திரமைடந்த பொது மக்கள் தேவராஜ்க்கு தர்ம அடி கொடுத்து சூரங்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். சற்று லேசான காயமடைந்து இருந்த தேவராஜை போலீசார் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். வழக்கம் போல மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறி போலீசார் தேவராஜ் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் தூத்துக்குடி ராமேஸ்வரம் ஈ.சி.ஆர் சாலையில் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மன நலம் பாதிப்பு என்ற பெயரில் மது அருந்தி விட்டு பெண்களிடம் தகராறு செய்வது, பைக்குகளை திருடி விற்பது, குடிசை வீடுகளில் தீயை வைப்பது என பல்வேறு தொந்தரவு கொடுத்து இம்சை மன்னன் போல் செயல்படும் கைது செய்ய வேண்டும் என்று கூறி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். வழக்கு பதிவு செய்யப்பட்டு தேவராஜை கைது செய்வோம் என்று போலீசார் உறுதியளித்தை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தேவராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மன நலம் பாதிப்பு என்று கூறி பல்வேறு இம்சைகளை கொடுத்து வந்த தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.