கள் இறக்க 10,000 மாமூல்.. போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கள் விற்பனை - கோவில்பட்டியில் பரபரப்பு
கள் இறக்க 10,000 மாமூல்.. போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கள் விற்பனை - கோவில்பட்டியில் பரபரப்பு
கள் இறக்க 10,000 மாமூல்
Thoothukudi District : செல் நம்பரில் இருந்து காவலர் தன்னிடம் பேசி மாமூல் கொடுக்கும் படி கூறியுள்ளதாக தெரிவித்தது மட்டுமின்றி அந்த செல் நம்பருக்கும் போன் செய்து கொடுத்துள்ளார்.
மாதம் தோறும் 10,000 மாமூல் , ஒரு வழக்கு என்ற அடிப்படையில் கொப்பம்பட்டி போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கள் விற்பனை செய்த நபர் வசமாக சிக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கொப்பம்பட்டி காவல் எல்லைக்குட்ப்பட்ட பகுதியில் பனைமரங்களில் அதிகமாக கள் இறக்கி சட்டவிரோதமாக விற்பனை செய்யப் படுவதாக கோவில்பட்டி டி.எஸ்.பி.உதயசூரியனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையெடுத்து கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு தனிப்படை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் தனிப்படை போலீசார் நேற்று கொப்பம்பட்டி அருகே கள்விற்பனை செய்து கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அவர் தான் மாதம் தோறும் 10 ஆயிரம், ஒரு வழக்கு என்று அடிப்படையில் கொப்பம்பட்டி போலீசாருடன் ஒப்பந்தம் செய்து கள் விற்பனை செய்து வருவதாகவும், கொப்பம்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் இருக்கும் பாரதி என்ற மெடிக்கலில் ரூ 10,000 வழங்கியுள்ளதாகவும்,
மேலும் ஒரு வழக்கும் தன் மேல் போடப்பட்டள்ளதாகவும் கூறியது மட்டுமின்றி, தன்னிடம் முத்துபாண்டி என்ற காவலர் மற்றும் ஒரு செல் நம்பரில் இருந்து காவலர் தன்னிடம் பேசிதான் மாமூல் கொடுக்கும் படி கூறியுள்ளதாகவும் தெரிவித்தது மட்டுமின்றி அந்த செல் நம்பருக்கும் போன் செய்து கொடுத்துள்ளார்.
அந்த போனில் தனிப்படை போலீசார் பேசிய போது அது ராஜ்குமார் என்ற காவலர் என்பது தெரியவந்தது. இது தொடர்பான 2 வீடீயோக்கள் தற்பொழுது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : மகேஷ்வரன் , தூத்துக்குடி மாவட்டம்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.