பெயிண்டர் கொலையில் திடீர் திருப்பம் - 17 வயது சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்

மாதிரிப்படம்

மதன்குமாரை மது அருந்த வரவழைத்து மதுபோதையில் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

 • Share this:
  கோவில்பட்டியில் பெயிண்டர் கொலை வழக்கில் 17வயது சிறுவன் கைது  செய்யப்பட்டுள்ளார். 

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் மதன் குமார் (22) கடந்த மாதம் 29ஆம் தேதி மந்திதோப்பு அருகே படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  Also Read: பிச்சைக்காரரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை.. டீ குடிக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

  இந்நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக தீத்தம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனை  போலீசார் கைது செய்துள்ளனர்.படுகொலை செய்யப்பட்ட பெயிண்டர் மதன்குமாரும், கைது செய்யப்பட்டுள்ள சிறுவனும் ஒன்றாக பெயிண்டர் வேலை பார்த்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இருவரும் ஒரே பெண்ணை காதலித்தாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாகக் கருதி, மதன்குமாரை மது அருந்த வரவழைத்து, மது அருந்திக் கொண்டிருக்கும்போது , தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் 17 வயது சிறுவன் வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையடுத்து போலீசார் 17வயது சிறுவனை கைது செய்து ,கொலைக்கு பயன்படுத்திய அரிவாள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: