முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 5 ஓட்டுகள் பெற்ற விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி.. விளாத்திகுளத்தில் அதிர்ச்சி சம்பவம்

5 ஓட்டுகள் பெற்ற விரக்தியில் அமமுக வேட்பாளர் தற்கொலை முயற்சி.. விளாத்திகுளத்தில் அதிர்ச்சி சம்பவம்

தற்கொலைக்கு முயன்ற அமமுக வேட்பாளர்

தற்கொலைக்கு முயன்ற அமமுக வேட்பாளர்

Vilathikulam: தேர்தலில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததால், மனமுடைந்து எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்.

  • 1-MIN READ
  • Last Updated :

விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்த விரக்தியில் எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் மற்றும் எட்டையபுரம் உள்ளிட்ட பேரூராட்சிகளுக்கு எட்டையபுரத்தில் உள்ள, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் பேரூராட்சி 8-வது வார்டில், அமமுக சார்பில் போட்டியிட்ட ராமஜெயம் என்ற பெண் வேட்பாளர் 5 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார்.

Also Read: ஒரு ஓட்டு கூட கிடைக்காத பாஜக வேட்பாளரின் பரிதாபம்..

இதனால் மனமுடைந்த அமமுக வேட்பாளர் ராமஜெயம், தேர்தலில் படுதோல்வியடைந்த விரக்தியில் எறும்பு பொடியை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனையடுத்து  எறும்புப்பொடி சாப்பிட்ட ராமஜெயத்தை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read: ஒற்றைப்படை சென்டிமெண்ட் -  போட்டியாக மனைவியை நிறுத்தி, 4-வது முறையாக வென்ற சுயேச்சை

தேர்தலில் தோல்வியடைந்த காரணத்திற்காக பெண் வேட்பாளர் ஒருவர் எறும்புப்பொடி சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: AMMK, Local Body Election 2022, Tuticorin, Vilathikulam