Home /News /tamil-nadu /

திமுகவின் 9 மாத கால ஆட்சியில் மக்கள் நொந்து போய் உள்ளனர் - கடம்பூர் ராஜூ

திமுகவின் 9 மாத கால ஆட்சியில் மக்கள் நொந்து போய் உள்ளனர் - கடம்பூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ

தமிழகத்தினை ஆளுக்கூடிய தகுதி படைத்த கட்சி அதிமுக என்பதனை நிரூபிக்க போகின்ற தேர்தல் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ 

தி.மு.கவின் 9 மாத கால ஆட்சியில் மக்கள் நொந்து போய் உள்ளதாகவும், தமிழகத்தினை ஆளக்கூடிய தகுதி படைத்த கட்சி அதிமுக என்பதனை நிரூபிக்க போகின்ற தேர்தலாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இருக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் அலுவலகத்தினை அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் அலுவலகத்தினை திறந்து வைத்தார்.

Also Read: தேர்தலில் நிற்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

தொடந்து நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ பேசுகையில், “தமிழகத்தினை ஆளுக்கூடிய தகுதி படைத்த கட்சி அ.தி.மு.க என்பதனை நிரூபிக்க போகின்ற தேர்தல் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்றும்,  நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள். அதற்கேற்ப திமுக 9 மாதகால ஆட்சியில் தமிழக மக்கள் நொந்து நூலாகி என்றைக்கு அதிமுக ஆட்சி மலரும் என்ற எண்ணத்தில் தமிழக வாக்காளர்கள் உள்ளனர்.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை 9 மாத கால ஆட்சியில் திமுக எதுவும் செய்யவில்லை, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது கிடைத்து ஒவ்வொருக்கும் வாழ்நாள் பாக்கியம்.  நிச்சயம் இரட்டை இலை வெற்றி பெறும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது தனிபட்ட நபர் தாக்குதல் குறித்து பேசமால் தி.மு.க கடந்த 9 மாதங்களில் செய்ய தவறியதை எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்றார்.
Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, DMK, Kadambur raju, Local Body Election 2022, Thoothukudi

அடுத்த செய்தி