தூத்துக்குடியில் ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு திட்டத்தில் போலி கையெழுத்து போட்டு பல லட்சம் ரூபாய் மோசடி

Youtube Video

தூத்துக்குடி மாவட்டத்தில், ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு திட்டத்தில் போலி கையெழுத்து மூலமாக பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • Share this:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற திட்டம் 2012ம் ஆண்டுமுதல் அமலில் உள்ளது. நிதி மற்றும் நிதிசாராத திட்டங்களை ஊரக ஏழை மக்களுக்கு வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியிலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஒருங்கிணைத்து ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு ஏற்படுத்தப்படும். அந்த கூட்டமைப்புக்கு வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் நிதி ஆதாரம் வழங்கப்படும். தற்போது இந்த நிதியில் தான் மோசடி நடந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டன்பட்டி ஊராட்சியில், வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி மகளிர் கூட்டமைப்பு ஆகியவற்றின் கணக்காளராக ஜோதி உள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வறுமை ஒழிப்பு சங்கத்தில், செயலாளர், பொருளாளர் ஆகியோரின் கையெழுத்துக்களை போலியாக இட்டு 14,18,000 ரூபாய் மற்றும் 13,00000 ரூபாய் என மொத்தம் 27,00000 ரூபாய்க்கும் அதிகமாக கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேபோல் தான் தலைவராக உள்ள, செயல்பாட்டில் இல்லாத மகளிர் சுய உதவிக் குழுவின் பெயரில் இரண்டு 2,98,000 ரூபாய் கடன் வாங்கியுள்ளார் ஜோதி என்பதும் இன்னொரு குற்றச்சாட்டு.

வறுமை ஒழிப்பு சங்கத்தின் நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்காததால் நிர்வாகச் செலவினங்களுக்காக தான் போலி கையெழுத்துப் போட்டுப் பணம் எடுத்ததாக ஜோதி ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க... 7வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5வருட சிறை தண்டனை!

அதேநேரம் தனது குழுவின் பெயரில் எடுத்த பணத்திற்கு தான் பொறுப்பேற்பதாகவும் எழுதிக் கொடுத்துள்ளார். வறுமை ஒழிப்பு சங்கத்தின் முன்னாள் செயலாளரான முத்துலட்சுமியின் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தன் மீது அவதுாறு பரப்புவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.புகாரை தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் புதூர் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுப்பையா நேரில் விசாரணை நடத்தினார். போலி கையெழுத்து போட்டது உறுதியான நிலையில், விசாரணை அறிக்கையை புதூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் தங்களது தலைமை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்க உள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் புகாரின் மீது மாவட்ட ஆட்சியர் தலைமையில் முழுமையான விசாரணை நடத்தப்படுமா?உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: