கோவில்பட்டியில் 40 சதவீதம் கந்து வட்டி வசூல் மற்றும் கந்து வட்டி புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா(30). கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் வீட்டில் இருந்து வருகிறார். பிரவீனா தொடக்கத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவருடன் சேர்ந்து பழைய வாகனங்கள் வாங்குவது, விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ம் ஆண்டு கயத்தாரில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் முருகன் என்பவரிடம் இருந்து 4 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார்.
முதலில் 6 பைசா வட்டி கொடுத்து வந்துள்ளார். பின்னர் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியள்ளார். இதற்கும் வட்டி கொடுத்து வந்த நிலையில் பிரவீனா சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த முருகன், 6 பைசா வட்டியை 10 பைசா வட்டியாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பிரவீனா கொடுக்க தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் தொழிலும் முடக்கம் ஏற்பட, பிரவீனா வட்டிகொடுக்க முடியமால் பரிதவிக்க, முருகன் வேறு ஒரு நபரை கை காட்டி, அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா அவர் கூறிய நபரிடம் வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் மற்றொருவரிடம் வாங்கிய பணத்திற்கு வட்டி கொடுக்க வேறு ஒருவரிடம் வாங்கியுள்ளார். இப்படி ஒருவரிடம் பணம் வாங்கி மற்றொருவருக்கு அடைக்க என 48 பேரிடம் இது போன்று வட்டிக்கு பணம் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு பிரவீனா தள்ளப்பட்டுள்ளார். நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணம் கொடுத்தவர்கள் பிரவீனாவிடம் வாங்க தொடங்கினார்.
Also Read: வானதி சீனிவாசன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு
வெளியில் சொன்னால் தங்களுக்கு அவமானம் ஏற்படுவது மட்டுமின்றி, வட்டிக்கு கொடுத்தவர்கள் தங்களை ஏதவாது செய்து விடுவர்களோ என்ற அச்சத்தில் வெளியே சொல்ல முடியமால் பரிதவித்து வந்த பிரவீனா, வேறு வழியில்லமால் தனது 100பவுன் நகை, தனது தாய்யின் 40பவுன் நகையை விற்பனை செய்தும், தனது தந்தையின் சேமிப்பு பணம் 20 லட்சம், தனது சகோதரனின் 19லட்ச ரூபாய் ஆகியவற்றையும் வட்டிக்காக கொடுத்துள்ளார். மேலும் 10சென்ட் நிலத்தினையும் வட்டிக்கு பணம் கட்டி இழந்துள்ளார்.
இப்படி 6 லட்ச ரூபாய்க்காக 3 கோடி ரூபாய் வரை வட்டி கட்டியது மட்டுமின்றி, சிலரின் கடனையும் அடைத்துள்ளனர். வாங்கிய முதலுக்கு மேல் பலமடங்கு பணம் வட்டியாக கொடுத்த பிறகும், அதில் 18 பேர் தொடர்ந்து பிரவீனாவை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த சிலரும் பிரவீனாவிற்கு கடன் கொடுத்துள்ளதால் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அவரை மிரட்ட தொடங்கியுள்ளனர். மேலும் பிரவீனாவிற்கு ஆதரவாக இருந்த அதே ஊரைச் சேர்ந்த சரண்யா, ராணி, அந்தோணி மற்றும் பிரவீனா சகோதரர் வினோபாலா ஆகியோரையும் கந்துவட்டி கும்பல் மிரட்ட தொடங்கியுள்ளது.
இந்நிலையில் பிரவீனா மற்றும் சரண்யா,ராணி, அந்தோணி, வினோபாலா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் ஆகியோரிடம் புகார் மனு அளிக்க, இது குறித்து உடனடியாக நடவடிக்கை கடம்பூர் காவல் நிலையத்திற்கு மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையெடுத்து கடம்பூர். காவல் நிலையத்தில் பிரவீனாவிடம் புகார் பெற்று பிரவீனாவை மிரட்டிய முருகன், மகாராஜா, கிருஷ்ணம்மாள், குருவம்மாள், செல்வராணி, செல்வி, சிவசக்திராமன், சிவசக்தி,ராஜா, கங்கா, ராஜேஸ் கண்ணா, தேன்ராஜா, ராம்குமார், ராஜா ஆகிய 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் காவல் நிலைய ஜாமீனில் 14 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதில் சிவசக்தி என்பவருடைய கணவர் நாரயணணன் காவலராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் முருகனை கைது செய்தனர். இந்நிலையில் வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தி தொடர்ந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், தன்னுடைய குடும்பத்தினரால் வீட்டை விட்டுக்கூட வெளி வரமுடியாத நிலை இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு கோரி பிரவீனா வெளியிட்ட வீடியோ மற்றும் பிரவீனா சகோதரர் வினோபாலாவிடம் தேன்ராஜா பேசிய ஆடியோ ஆகியவை வைரலாக பரவியது.
இதையடுத்து மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் உத்தரவின் பெயரில் தலைமறைவாக உள்ள 13 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். இதில் தேன்ராஜா, ராஜா ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் இந்த வழக்கில் தற்பொழுது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர் மனைவி சிவசக்தி உள்டபட 11பேரை போலீசார் தேடிவருகின்றனர். இது தவிர பிரவீனா வீட்டு பகுதியில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Arrest, Crime News, Interest, Interest rate, Money, News On Instagram, Police complaint, Video