• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வெளிநாட்டு வேலை.. 22 லட்சம் சுருட்டல்.. நிற்கதியாய் நிற்கும் குடும்பங்கள் - நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை

வெளிநாட்டு வேலை.. 22 லட்சம் சுருட்டல்.. நிற்கதியாய் நிற்கும் குடும்பங்கள் - நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை

தூத்துக்குடி

தூத்துக்குடி

வெளிநாட்டுக்கு அனுப்பவதற்காக முன் பணமாக ஒவ்வொருரிடம் 40 ஆயிரம் முதல் 6 லட்சம் வரை பெற்று சுமார் 22 லட்ச ரூபாய் கொடுத்தாக கூறப்படுகிறது.

  • Share this:
கோவில்பட்டி அருகே பணம் மற்றும் பாஸ்போர்ட்கள் கொடுத்து விட்டு நிற்கதியாக இருக்கும் 22 குடும்பங்கள். புகார் அளித்தும் 3 வருடங்களாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வெளிநாட்டில் வேலை என்று கூறி போலியான பணி நியமன ஆணை மற்றும் விசா கொடுத்தது மட்டுமின்றி முன் பணமாக கொடுத்த 22 லட்ச ரூபாய் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை தரமால் இருப்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் புகார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் 22 பேரின் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பணம் வாங்கி கொடுத்தவர் குடும்பம் நிற்கதியாகி இருக்கும் நிலை இருப்பதால் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

Also Read: கிராம உதவியாளரை காலில் விழ வைத்த விவகாரம் - குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இடைச்செவல் கிராமத்தினை சேர்ந்த மாரிமுத்து என்பவரது மகன் சுசில் குமார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதன் பின்னர் ஊருக்கு திரும்பி விவசாய பணிகள் பார்த்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் மூலமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலூகா பிரமனூர் பகுதியை சேர்ந்த வில்லியப்பன் மகன் முனீஸ்வரன் பழக்கமாகி உள்ளார்.

சுசில் குமார்


முனீஸ்வரன் தான் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆள்களை அனுப்பி வருவதாகவும், துபாய், கம்போடியா, மலேசியா, நைஜீரியா நாடுகளில் டவர் லைன், மின்கம்பம் நடுதல், மருத்துவனை பணியாற்ற ஆள்கள் தேவைப்படுவதாகவும், தங்கள் பகுதியில் ஆட்கள் இருந்தால் அழைத்து வரும்படி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு சுசில்குமார், தனது ஊரில் உள்ள உறவுக்கார இளைஞர்கள் மற்றும் வில்லிசேரி, வேப்பன்குளம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 22 பேரை வெளிநாட்டு வேலைக்கு அழைத்துச்செல்வதற்காக அவர்களுடைய பாஸ்போட் ஆகியவற்றை பெற்று முனீஸ்வரனிடம் கொடுத்துள்ளார். மேலும் வெளிநாட்டுக்கு அனுப்பவதற்காக முன் பணமாக ஒவ்வொருரிடம் 40 ஆயிரம் முதல் 6 லட்சம் வரை பெற்று சுமார் 22 லட்ச ரூபாய் கொடுத்தாக கூறப்படுகிறது.

Also Read:  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி: மாற்றுத்திறனாளி இளைஞருக்கு செயற்கைக் கால் கிடைத்தது!

இதையடுத்து பணம் கொடுத்த சில நாள்களில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார். மருத்துவ பரிசோதனை செய்த சில நாள்களில் அனைவருக்கும் அவர்கள் பணிபுரிய உள்ள நிறுவனங்களில் வேலைக்கான பணி ஆணை மற்றும் வெளிநாடு செல்வதற்கான விசா ஆகியவற்றை சுசில்குமார் வாட்ஸ் அப்க்கு முனிஸ்வரன் அனுப்பியுள்ளார். மதுரையில் இருந்து விமானம் என்றும், அனைவரையும் அங்கு அழைத்து வரும்படியும், அங்கு வைத்து ஒரிஜினல் காப்பி, விமான டிக்கெட் வழங்குவதாக முனியஸ்வரன் கூறியதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சுசில் குமார், 22 பேரையும் அங்கு அழைத்து சென்றதும், கம்பெனி சரியில்லை, விசாவில் பிழை உள்ளது, விரைவில் அவை சரிசெய்யப்பட்டு கடிதம் வரும், அதன் பின்னர் வெளிநாட்டிற்கு செல்லாம் என்று ஏதாவது ஒரு காரணத்தினை கூறி அவர்களை முனீஸ்வரன் ஊருக்கு திரும்பி அனுப்பி வைத்துள்ளார். இது போன்று 4 முறை  பணி ஒப்பந்தம் கடிதம், விசா நகல் கொடுத்து ஏமாற்றியுள்ளார். இதையெடுத்து சுசில்குமார் மற்றும் பணம் கொடுத்த 22 பேரும், முனீஸ்வரனிடம் பாஸ்போர்ட் மற்றும் பணத்தினை திரும்ப தரும்படி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

Also Read: நள்ளிரவில் ஜன்னலில் எட்டிப்பார்க்கும் கொள்ளையர்கள்.. அதிரவைத்த சிசிடிவி காட்சிகள் - இருவர் கைது

இதையடுத்து வில்லிசேரியை சேர்ந்த ஒருவரையும் மட்டும் கம்போடியவிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அந்த நபர் அங்கு சென்ற போது தான் தெரிந்துள்ளது. அது போலியான கம்பெனி என்று அதன் பின்னர் மிகவும் கஷ்டப்பட்டு அந்த நபர் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.இதையடுத்து பணம் கொடுத்த 25 பேரும் சுசில்குமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.



இது பற்றி சுசில்குமார், முனீஸ்வரனிடம் தெரிவிக்க, அதற்கு அவர் 19 பேர் பாஸ்போர்ட்டினை திரும்ப கொடுத்துள்ளார். மேலும் மீதமுள்ள 6 பாஸ்போர்ட் மற்றும் 22 லட்ச ரூபாய் பணத்தினை 6 மாதத்தில் தருவதாக பணம் கொடுத்துவர்களிடம் தெரிவித்தது மட்டுமின்றி, பத்திரமும் எழுதி கொடுத்துள்ளார். ஆனால் எழுதி கொடுத்தது மாதிரி முனீஸ்வரன் செயல்படமால் ஏமாற்றியுள்ளார்.

ஆனால் பணம் கொடுத்துவர்கள் தங்களுக்கு முனீஸ்வரன் யார் என்று தெரியாது தங்களை நம்பி தான் கொடுத்தோம் என்றும், தங்கள் தான் தர வேண்டும் என்று  22 பேரும் சுசில்குமாருக்கு நெருக்கடி கொடுத்தது மட்டுமின்றி, 4 பேர் சுசில்குமார் மற்றும் முனீஸ்வரன் மீது கடந்த 2018ம் ஆண்டு நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் முனீஸ்வரன் மீது சுசில்குமாரும் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணைக்கு அளித்த போது தான் வெளியில் இருப்பதாகவும், பணத்தினை திரும்ப கொடுத்து விடுகிறேன் என்று கூறியது மட்டுமின்றி, சுசில்குமார் வங்கி கணக்கிற்கு ரூ 8 ஆயிரம் மட்டும் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் சுசில்குமாரை தொடர்பு கொண்ட முனீஸ்வரன், அவரை மதுரைக்கு வரும்படியும் அங்கு வைத்து பணம் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி சுசில்குமார் மதுரைக்கு சென்றதும், சில நாள்கள் தங்கி இருக்கும் படியும், பணத்தினை தயார் செய்து தருவதாக கூறி தங்க வைத்துள்ளார். ஆனால் பணத்தினை தரமால் இழுத்தடித்து மட்டுமின்றி, அவ்வப்போது சுசில்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

Also Read: திருமணமான இரண்டேநாளில் காதல் மனைவி கொலை.. நாடகமாடிய காதல் கணவன் - அதிர்ச்சி வாக்குமூலம்

இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு சுசில்குமார் இருந்தாகவும், சுமார் 2 ஆண்டுகள் சுசில்குமாரை, முனீஸ்வரன் தனது கட்டுபாட்டில் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து தப்பி வந்த சுசில்குமார் மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கம் போல போலீசார் முனீஸ்வரனை அழைக்க இதோ, அதோ வருகிறேன் என்று கூறி தற்பொழுது வரை வரைவில்லை. சுசில்குமார் ஊருக்கு வந்து குறித்து தெரிந்ததும் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அவருடைய வீட்டிற்கு வந்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

இப்பிரச்சினை காரணமாக சுசில்குமார், மனைவி, பெண்குழந்தையுடன் தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். நெருக்கடி அதிகாரிக்கவே தனது விவசாய நிலத்தினை விற்றும், வீட்டினை அடமானம் வைத்தும் 3 பேருக்கு பணம் கொடுத்துள்ளார். மீதமுள்ளவர்களுக்கு பணம் கொடுக்க முடியமால் தவித்து வருவது மட்டுமின்றி, வேறு வழி இல்லமால் தற்கொலைக்கும் முயன்ற போது அருகில் இருந்தவர்கள் காப்பாற்றியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக காவல் நிலையத்திற்கு அலைந்தபடி உள்ளார் சுசில்குமார், ஆனால் இதுவரை அவரது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை

வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட் முனீஸ்வரன் என்பவர் தனது உறவினர் மூலமாக பழக்கமானார். அவருடைய பேச்சை நம்பி வெளிநாட்டு வேலைக்காக 22 பேரிடம் பணம் வாங்கி கொடுத்தாகவும், ஆனால் போலியான பணி ஆணை, போலி விசா வழங்கி ஏமாற்றியதாகவும், தன்னையும் 2 ஆண்டுகளாக அறையில் அடைத்து சித்திரவதை செய்ததாகவும், அதில் தப்பித்து பிழைத்து வந்ததாகவும், பணம் வாங்கியதற்கு முனீஸ்வரன் பத்திரமும் எழுதி கொடுத்துள்ளார். பணம் கொடுத்தவர்கள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், இதனால் தனது மனைவி குழந்தை பிரிந்து சென்று விட்டதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து இதுவரை எவ்வித நடவடிக்கை இல்லை என்று, இனியும் நடவடிக்கை இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என  சுசில்குமார் வேதனையுடன் தெரிவிக்கிறார்.

நாகலெட்சுமி


வெளிநாட்டிற்கு பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் ஒருவரான முத்துராஜ் மனைவி நாகலெட்சுமி  கூறுகையில், “வெளிநாட்டில் நல்ல வேலை எங்கள் உறவினர் சுசில்குமார் கூறியதால் அவரை நம்பி ரூ40 ஆயிரம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றை கொடுத்ததாகவும், முனீஸ்வரன் 4 முறை கடிதம், விசா என்று போலியாக கொடுத்து ஏமாற்றியதாகவும், பணம் மற்றும் பாஸ்போர்ட் பலமுறை கேட்டும் தரவில்லை என்றும், கடன் வாங்கியதான பணம் கொடுத்த காரணத்தினால் தற்பொழுது வரை வட்டி கட்டிவருதாகவும், பணமும் கிடைக்கவில்லை, பாஸ்போர்ட்டும் கிடைக்கவில்லை என்பதால் தனது கணவர் மதுவிற்கு அடிமையாகி, சுசில்குமாரிடம் தினமும் சண்டை போட்டு வருவதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முதல்வர் தலையீட்டு தங்களது 22 பேரையும் பணத்தினையும் பெற்று தர வேண்டும் என்றார்.

பணம் கொடுத்த ஏமாந்தவரின் உறவினர் ராஜகோபால் என்பவர் கூறுகையில்,”எங்கள் பகுதியில் உள்ளவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்ந்து வருகின்றனர். இங்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்காக சுசில்குமார் பணம் கொடுத்தார். ஆனால் முனீஸ்வரன் ஏமாற்றி விட்டு சென்றதால் பணம் கொடுத்தவர்கள் சுசில்குமாருக்கு நெருக்கடி கொடுத்த காரணத்தினால் அவரது மனைவி பிரிந்து சென்றது மட்டுமின்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்றி நாங்கள் வைத்துள்ளோம், அரசை நம்புவதாகவும், விரைவல் நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தினை எங்களுக்கு பெற்று தர வேண்டும் என்றார்.

இது குறித்து குற்றம்சாட்டப்படும் முனீஸ்வரனை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது , “எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சுசில்குமாரை நேரில் வர சொல்லி, இப்பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் மூலமாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததுள்ளேன். இதுவரை 6 பேரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்ததேன் ஊதியம் குறைவு என்று திரும்பி வந்துவிட்டனர்.

என்னிடம் 1லட்சத்து 30 ஆயிரம் மட்டும் கொடுத்தனர், என்னுடன் 3 ஆண்டுகள் உடன் இருந்த கோவை மற்றும் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் என்னிடம் பணம் பெற்று கொண்டு ஏமாற்றி விட்டனர். இது தொடர்பாக புகார் அளித்துள்ளேன், இது சுசில்குமாருக்கு தெரியும். அவர் வைத்திருக்கும் சொல்போன் முதல் தான் வாங்கி கொடுத்தது .அவரை நான் அடைத்து வைக்கவில்லை, நான் ஒரு பத்திரம் மட்டும் தான் எழுதி கொடுத்தேன், அதன்படி அவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டேன். தற்பொழுது வைத்திருக்கும் பாத்திரம் போலி எனது உடல்நிலை சரியானதும் விரைவில் வந்து பேசி முடித்துவிடுவதாக தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முனீஸ்வரன் கூறியது தொடர்பாக சுசில்குமாரிடம் கேட்ட போது முனீஸ்வரன் பொய் கூறி வருவதாகவும், போலீசார் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் என்றார்.துகுறித்து காவல்துறையில் கேட்ட போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் வேலை, நல்ல சம்பளம் என்ற கவர்சியான பேச்சில் ஏமாந்து 22 பேர் தங்களது பணத்தினை இழந்து பரிதவித்து வருகின்றனர். ஒருவர் குடும்பத்தினை இழந்து தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், காவல்துறையினர் இதில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: