29 ஆண்டுகளாக சொந்த நிலத்தினை உரிமை கொண்டாட முடியாமல் தவிக்கும் குடும்பங்கள்! வீட்டுவசதி வாரியத்தினரின் செயலால் அதிருப்தி..!

பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்

இந்த நிலத்தினை ஏழைகளுக்கு கொடுத்தால் கூட பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ஒரு வசதியுள்ள தனிநபருக்கு கொடுத்துள்ளனர். இப்பகுதியில் தற்பொழுது ஒரு சென்ட் 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெறும் 2 லட்ச ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்யபட்டுள்ளதாகவும், இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் பாதிக்கப்பட்டவர்.

  • Share this:
29 ஆண்டுகளாக சொந்த நிலத்தினை உரிமை கொண்டாட முடியாமல் சில குடும்பத்தினர் தவித்து வரும் நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது வீட்டு வசதி வாரியம் அத்துமீறுவதாக குற்றம்சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். சர்வே நம்பர் வேறு, வேறு என குழப்பும் வீட்டுவசதி வாரியம் - விடை கிடைக்குமா? உண்மைகள் வெளி வருமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் 1994ம் ஆண்டு வருவாய்துறையினரால் கையகப்படுத்தப்பட்டு, வீட்டுவசதி வாரியத்திடம் ஒப்படைக்கப்ட்ட நிலம் தொடர்பாக நிலங்களின் உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடந்து நிலுவையில் உள்ள நிலையில் நீதிமன்ற ஸ்டேட்ஸ் கோவினை மீறி தனிநபருக்கு தங்களது நிலத்தினை வீட்டு வசதி வாரியம் விற்பனை செய்துள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவினை மீறி நிலத்தில் பணிகளை செய்து வருவதாகவும், மீறி கேட்டால் காவல்துறையை வைத்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் சில இடங்களை கடந்த 1994ம் ஆண்டு சுமார் 1  ஏக்கர் அளவிலான இடத்தினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் திருநெல்வேலி பிரிவுக்காக வருவாய்துறை சார்பில் நிலம் கையகப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து நிலங்களுக்கான உரிமையாளர்கள் 128 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் 3 பேருக்கு மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

Also Read:   விலையுயர்ந்த பங்களாவை நஷ்டத்துக்கு விற்பனை செய்த ரோகித் சர்மா..! காரணம் என்ன?

இந்நிலையில் இதே கிருஷ்ணா நகர் பகுதியில் 8.35 சென்ட இடம் வைத்திருந்த ஜோதிலெட்சுமி என்பவரது இடமும் கையகப்படுத்தப்பட்டு வீட்டு வசதி வரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் அவருக்கும் தீர்ப்பு வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையெடுத்து ஜோதிலெட்சுமி சென்னை உயர்நீதமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதில் நீதிமன்றம் ஸ்டேட்ஸ் கோ என்ற ஆணை வழங்கியது. அதாவது பிரச்சினை முடியும் வரை தற்பொழுது இருக்கும் நிலை தொடர வேண்டும் என்று தெரிவித்து இருந்ததாக தெரிகிறது.

இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இந்த இடத்தினை டெண்டர் விட்டு தனியாருக்கு விற்பனை செய்துள்ளதாகவும், மேலும் தனது இடத்திற்கு நுழைந்து சேதப்படுத்தியுள்ளதாக ஜோதிலெட்சுமி குற்றம் சாட்டுகின்றார். கடந்த 2018ம் ஆண்டு தனது இடத்தில் அத்துமீறி நுழைந்து வாறுகால் கட்டியதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதே போன்று தனது இடத்தினை சேதப்படுத்தி தனக்கு மிரட்டல் விடுப்பதாக கூறி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திலும் ஜோதிலெட்சுமி புகார் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியருக்கு அளித்த புகாரை அடுத்து இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிடப்பட்ட பின்னரும் தற்பொழுது வரை விசாரணை நடத்தப்படவில்லை.

Also Read:   சச்சின் மகன் தோனியின் ஆசிரியர் பணி விண்ணப்பம்... ரசிகர்கள் குழப்பம்!

இது தொடர்பான செய்தி கடந்த ஏப்ரல் 30ந்தேதி நியூஸ் 18ல்க்ரைம் டைமில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில் வீட்டுவசதி வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களில் உரிமையாளர்கள் ஒருவரான மகாலெட்சுமி என்பவரும் சென்னை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து ஸ்டேட்ஸ் கோ என்ற ஆணை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான போர்டு மற்றும் தங்களது இடத்தினை சுற்றி கம்பி வேலி போட்டு இருந்துள்ளனர்

இந்த சூழ்நிலையில் தான் மகாலெட்சுமி குடும்பத்தினர் வைத்த போர் மற்றும் கம்பி வேலியை அகற்றிவிட்டு, வீட்டு வசதி வாரியத்தின் போர்டு வைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, அந்த நிலத்தின் ஒரு பகுதியில் கம்பி வேலியும் போடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து ஜோதிலெட்சுமி, மகாலெட்சுமி குடும்பத்தினர் மற்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ளது, மேலும் வரும் 6ந்தேதி இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் அவசரம், அவசரமாக வீட்டு வசதி வாரியம் மற்றும் நிலத்தினை வாங்கி தனிநபர் ஏன் இவ்வளவு அவசர, அவசரமாக போலீசார் துணையுடன் பணிகளை தொடங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். பணிகளை தடுக்க வேண்டும் என்று கூறிய பெண்களை போலீசார் மிரட்டியதாக கூறப்படுகிறது.

Also Read:   பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!

வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது, நீதிமன்றம் ஸ்டேட்ஸ் கோ கொடுத்துள்ளது. இந்நிலையில் வீட்டு வசதி வாரியம் தனிநபருக்கு 33 சென்ட் நிலத்தினை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது. அந்த தனிநபர் தற்பொழுது நிலத்திற்குள் இறங்கி சேதப்படுத்தி அவர்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர். இதனை தடுக்க காவல்நிலையம், மற்றும் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளோம், ஆனால் எவ்வித நடவடிக்கையும் இல்லை, ஆனால் போலீசாரை வைத்து மிரட்டி, எங்களை வெளியே அனுப்பி விட்டு கம்பிவேலி போட்டு வைத்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருக்கும் போது, அத்துமீறி நுழைவது நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயலாகும், தொடர்ந்து நாங்கள் போராடி கொண்டு இருக்கிறோம் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்கிறார் பாதிக்கப்பட்ட ஜோதிலெட்சுமி

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மகாலெட்சுமியின் மகள் காந்திமதி கூறுகையில் தனது தாய் 1991ல் இப்பகுதியில் நிலத்தினை வாங்கியதாகவும், 94ல் வீட்டுவசதி வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது இடத்தில் போட்ட கம்பி வேலியை வீட்டு வசதி வாரியத்தினர் அடித்து நொருக்கியுள்ளனர் என தெரிவிக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஸ்டேட்ஸ் கோ கொடுத்துள்ளது. அது தொடர்பாக வைக்கப்பட்ட போர்டினையும் தகர்த்து எறிந்துள்ளனர். 6ந்தேதி விசாரணைக்கு நீதிமன்றத்தில் வர உள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவினை மீறி கம்பி வேலி போட்டுள்ளதாகவும், வீட்டு வசதி வாரியத்திடம் இடம் இருக்கும் என சொல்லப்படும் நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தங்கள் அருகில் இருக்கும் ஒரு நபருக்கு அவர் பெயரில் இடம் இருப்பதாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. நிலத்திற்கான பத்திரம் எங்களிடம் தான், உள்ளது, ஈசியிலும் என்னுடைய அம்மா பெயர் தான் வருகிறது. வீட்டுவசதி வாரியம் இந்த நிலத்தினை ஏழைகளுக்கு கொடுத்தால் கூட பயனுள்ளதாக இருக்கும், ஆனால் ஒரு வசதியுள்ள தனிநபருக்கு கொடுத்துள்ளது. இப்பகுதியில் தற்பொழுது ஒரு சென்ட் 10 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வெறும் 2 லட்ச ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்யபட்டுள்ளதாகவும், இதற்கு காவல்துறையும் உடந்தையாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Also Read:   நாங்கல்லாம் விமானத்தில் இருந்தே ஜம்பிங்கில் இறங்குனவங்க.. ! விரக்தியில் விமான பயணி செய்த விநோத செயல்!

இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நிர்வாக பொறியாளர் பாண்டியராஜனிடம் கேட்ட போது முறையாக வருவாய் துறையில் இருந்து வீட்டுவசதி வாரியத்திற்கு மாற்றப்பட்டு பட்டா உள்ளது. நீதிமன்றத்தில் வாங்கப்பட்டுள்ள சர்வே நம்பருக்கும் எங்களது சர்வே நம்பருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களின் நிலங்களுக்கு உரிய தொகை வருவாய்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வருவாய்துறையில் போய் பணத்தினை வாங்கி கொள்ள வேண்டும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ள சர்வே நம்பர் எங்கே இருக்கு என்று தெரியவில்லை என்றார்.

நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள சர்வே நம்பரும், வீட்டு வசதி வாரியம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சர்வே நம்பரும் வேறு வேறு என்றால் கடந்த 2017ந்தேதி முதல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறது. இது குறித்து நீதிமன்றத்தில் தெரிவித்து அந்த வழக்கினை ஏன் முடிவுக்கு கொண்டு வரவில்லை என்ற கேள்வி எழுகிறது.

நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பவர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் சர்வே எண் நிலமும், வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்ட சர்வே எண் வெவ்வேறு என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துவர்களுக்கு ஏன் நிலத்திற்கான தொகையை வருவாய்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

இரண்டும் வெவ்வேறு சர்வே எண் என்றால் அதனை விளக்க வேண்டியதும், நீதிமன்றத்தில் வழக்கினை முடிக்க வேண்டிய கடமையும் வீட்டு வசதி வாரியத்தின் கடமை. இல்லாத சர்வே எண்ணிற்கு எப்படி நீதிமன்ற ஸ்டேட்ஸ் கோ கொடுக்க முடியும் என்ற கேள்வியும் சேர்ந்து எழுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

29 ஆண்டுகளாக தங்களது நிலத்தினை வாங்கி விட்டு, அதனை எதையும் செய்ய முடியமால் நீதிமன்றம், காவல் நிலையம் என மக்கள் அலைந்து வருகின்றனர். மேலும் இந்த நில விற்பனையில் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க அரசு உரிய விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றும், ஒரு தனிநபருக்காக ஏன் ? வீட்டு வசதி வாரியம் இவ்வளவு அக்கறை கொண்டுள்ளது என்ற உண்மையும் வெளியே வரும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்...
Published by:Arun
First published: