தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில், சங்கரபாண்டியன் என்ற 70 வயதான முதியவர் வசித்து வருகிறார். படிப்பறிவில்லாத அவர், விவசாய கூலித் தொழில் செய்துகொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தார். செவித்திறன் குறைபாடுடைய இவர், திருமணமாகாத நிலையில், தனியாக வசித்து வந்தார்.
6 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடி ஆடி வேலை செய்து வந்த சங்கரபாண்டியனுக்கு தற்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவரது அண்ணன் மகள் வசந்தா தான் பண உதவிகளை செய்து வருகிறார். இளமைக் காலத்தில் வேலை செய்து சேமிக்கும் பணத்தை ஆங்காங்கே ஒளித்து வைத்து பின்னர் தேவைப்படும்போது எடுத்து செலவு செய்துள்ளார். அந்த வகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு தாம் சேமித்து வைத்த 42,500 ரூபாய் பணத்தை பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றி தண்ணீர் தொட்டிக்கு அடியில் வைத்துள்ளார். பின்னர் பணத்தை வைத்தது மறந்தும் போனது. இந்நிலையில் அண்மையில் வீட்டை காலி செய்யும்போது அந்த பணம் கையில் கிடைத்தது. அதனை எடுத்துக்கொண்டு போய் கடையில் கொடுத்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.
இதனால் அதிர்ந்துபோன சங்கரபாண்டியன், இதற்கு யார் காரணம் என கேட்க, கடைக்காரரோ பிரதமர் மோடிதான் இதனை செல்லாது என 2016-ம் ஆண்டில் அறிவித்தார் என சொன்னார். அவரது அண்ணன் மகள் வசந்தாவும் கோவில்பட்டியில் இருந்து அந்த பணத்தினை பார்த்து இது செல்லாது என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து முதியவர் சங்கரபாண்டியன் அருகில் வசிக்கும் பெண்மணி ஒருவர் உதவியுடன் பிரதமர், தமிழக முதல்வர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
தனக்கு படிப்பறிவு கிடையாது, காதுகளும் கேட்காது. உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தான் உழைத்து சேமித்து வைத்திருந்த பணம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு கிடைத்துள்ளதாகவும், ஆனால் அது தற்பொழுது செல்லாது என்று கூறுகின்றனர். தன்னால் வேலைக்கு போக இயலவில்லை என்றும், எனவே தனக்கு தனது பணத்தினை மாற்றி தருவது மட்டுமின்றி, அரசு உதவிதொகையும் வழங்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார்.
முதியவர் சங்கரபாண்டியனுக்கு உதவி செய்து வரும் அவரது அண்ணன் மகள் வசந்தா கூறுகையில் சங்கரபாண்டியன் விவசாய கூலி வேலை செய்து வந்தாகவும், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்றும். தற்பொழுது தன்னால் முடிந்த உதவியை அவருக்கு செய்து வருவதாகவும், அவருக்கு காதும் கேட்காது என்பதால் பணத்தினை யாரூம் திருடி விடுவார்களோ என்ற அச்சத்தில் வீட்டில் எங்கேயாவது ஒளித்து வைத்து பின்னர் எடுத்து செலவு செய்வது வழக்கம்.
படத் தயாரிப்பு என்ற பெயரில் ரூ.1.25 கோடி மோசடி - திரைப்பட இயக்குநர் மீது கோவை தம்பதி எஸ்.பியிடம் புகார்
அப்படி வைத்திருந்த பணத்தினை எங்கே வைத்தோம் என்ற தெரியமால் இருந்த நிலையில் தற்பொழுது கிடைத்துள்ளதாகவும், அது சொல்லாத பணம் என்றும், அது சங்கரபாண்டியனுக்கு தெரியாது என்றும், அவருக்கு அரசு உதவி தொகை வழங்கினால் அவருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
எந்த கல்வி அறிவு இல்லை என்பதால் தற்போது தான் மற்றவர்கள் கூறி ஆதார் அட்டை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.