Home /News /tamil-nadu /

2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் - கனிமொழி எம்.பி. அதிரடி பேச்சு

2 ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் - கனிமொழி எம்.பி. அதிரடி பேச்சு

கனிமொழி

கனிமொழி

Kanimozhi Campaign : இரண்டு ஆண்டுகளில் மத்தியில் ஆட்சிக்கு வருவோம் என்றும், சிலிண்டர் விலையை குறைப்போம் எனவும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.பி.யும், திமுக மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புதுக்கிராமத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்டனர். அப்போது கனிமொழி எம்.பி. பேசுகையில், திமுக ஆட்சி மகளிருக்கான ஆட்சி, மகளிருக்கு முதலிடம் தரும் ஆட்சி, ஆகையால் தான் ஆட்சிக்கு வந்தவுடன் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ளது என்றார்.

பெண்களுக்கு அரசு பணியில் 40 சதவீத இடதுக்கீடு அறிவித்து அதனை செயல்படுத்தி கொண்டு இருக்கும் அரசு என்றும், 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுக ஆட்சியில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை, இலவசமாக செல்போன் வழங்குவோம் என்றார்கள் வழங்கவில்லை, இலவச வைஃபை வழங்கப்படும் என்றார்கள் வழங்கவில்லை, முதியோர்களுக்கு அரசு பஸ்சில் இலவசம் என்றார்கள் அதுவும் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொண்டு இருக்கிறது என்று கூறிய கனிமொழி, பால்விலையை குறைத்துள்ளோம், பெட்ரோல் விலையை நாங்கள் ஏற்றவில்லை என்றாலும் குறைத்துள்ளோம். சமையல் கேஸ் விலையை ஏற்றுவது மத்தியரசு தான், அதனை குறைக்க முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளோம், சமையல் கேஸ் விலையை குறைக்க வேண்டியது பிரதமர் மோடியும் பாஜகவும் தான் என்றும், வாக்கு கேட்க வரும் பாஜகவிடம் நீங்களும் கோரிக்கையை கேளுங்கள் என்றும் கூறினார்.

சிலிண்டர் விலை அதிகம் என்பதனை நானும் ஒத்துக்கொள்கிறேன், அதை வாங்க முடியவில்லை என்று கூறிய கனிமொழி, நிச்சயமாக குறைக்க வேண்டும் என்றும், விரைவில் சிலிண்டர் விலையை குறைக்க கூடிய இடத்திற்கு திமுக வருவோம், இன்னும் 2 ஆண்டுகளில் தேர்தல் வரும் அந்த இடத்திற்கு நாம் வருவோம் அதை நிச்சயமாக திமுக செய்து தரும் என்றார்.

Must Read : திருச்சி மக்களை 'கவனிக்க' வேண்டுமென கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் நேரு அறிவுரை

இந்நிலையில், கனிமொழி பேசிக்கொண்டிருக்கும் போது, அப்பகுதியில் நின்று கொண்டு இருந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினை சேர்ந்த ஆனந்தமாரியப்பன் என்பவர், திடீரென கனிமொழி எம்.பியை பார்த்து கோவில்பட்டி நகருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கனிமொழி எம்.பியிடம் இருந்த மைக்கினை வாங்கிய அமைச்சர் கீதாஜீவன் நாங்க ஆட்சிக்கு வந்து 8 மாதம் ஆகிறது என்றும் சொன்னதை செய்வோம் என்றும் கூறினார். கனிமொழி எம்.பியும் நாங்கள் தேவையானதை செய்து இருக்கிறோம், இனியும் செய்யுவோம் என்று பதிலளித்தார்.

Read More : தேர்தல் முடிந்ததும் நல்ல அறிவிப்பு வெளியிட உள்ளேன்.. முதல்வர் ட்விஸ்ட்... என்னவா இருக்கும்?

ஆனால், அந்த நபர் தொடர்ந்து பேசியதால், போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர் மது அருந்தி இருந்தாகவும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:

Tags: Kanimozhi, Kovilpatti, Local Body Election 2022

அடுத்த செய்தி