Home /News /tamil-nadu /

மத்திய அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய திட்டங்கள் குறைந்துள்ளன - கனிமொழி

மத்திய அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய திட்டங்கள் குறைந்துள்ளன - கனிமொழி

கனிமொழி

கனிமொழி

Thoothukudi : திட்டங்களை சரியான அளவில் நிறைவேற்றி மக்களிடம் கொண்டுபோய் தரமான திட்டங்களாக சேர்க்க வேண்டும் என்று கூறினார் கனிமொழி எம்.பி.

    திட்டங்களை சரியான அளவில் நிறைவேற்றி மக்களிடம் கொண்டுபோய், தரமான திட்டங்களாக சேர்க்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசினார்.

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி, வருவாய், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சீர்மிகு நகர திட்டம் உட்பட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்ட பணிகளில் தற்போது வரை நடந்துள்ளவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதுவரை முடிக்கப்படாத திட்டங்களை விரைந்து முடிக்கவும் இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

    முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நபார்டு வங்கி மூலமாக தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து நபார்டு வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் கனிமொழி எம்பி பேசுகையில், மத்திய அரசாங்கத்திடம் இருந்து வரக்கூடிய திட்டங்கள் குறைந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் திட்டங்களை சரியான அளவில் நிறைவேற்றி மக்களிடம் கொண்டுபோய் தரமான திட்டங்களாக சேர்க்க வேண்டும் என்றார்.

    Must Read : ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிப்பு - முழு விவரம்

    இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான திருமிகு.கீதா ஜீவன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.வி.மார்கண்டேயன், திரு.எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியர் திரு.சரவணன், மாவட்ட நபார்டு பொது உதவி மேலாளர் திரு.சுரேஷ் இராமலிங்கம், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர் :பி. முரளிகணேஷ், தூத்துக்குடி.
    Published by:Suresh V
    First published:

    Tags: Kanimozhi, Thoothukudi

    அடுத்த செய்தி