உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க மத்திய அரசுவுடன் பேசி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பட்டாசு உள்ளிட்ட தொழிற்சாலைகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண தொகை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் செயல்பட்டு வரும் செஞ்சுரி ஃபயர் ஓர்க்ஸ் பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் அந்த ஆலையில் பணியாற்றிய தொட்டம்பட்டியை சேர்ந்த ஜெயராஜ், ஈராட்சியை சேர்ந்த ராமர், குமராபுரத்தினை சேர்ந்த தங்கவேல், நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 4 தொழிலாளர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்தது மட்டுமின்றி தலா 3 லட்ச ரூபாய், முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண உதவி தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையெடுத்து, உயிரிழந்த 4 தொழிலாளர்களின் வீடுகளுக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி, தமிழக முதல்வர் அறிவித்த ரூ 3லட்ச ருபாய் நிவாரண தொகைக்கான காசோலையை வழங்கினர். இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் மற்றும் கோட்டாட்சியர், தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, கையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் குடும்பத்திற்கு தானும், அமைச்சர் கீதா ஜீவன் ஆறுதல் கூறி, முதல்வர் அறிவித்த நிவாரண உதவித் தொகைக்கான காசோலையை அந்தக் குடும்பங்களுக்கு வழங்கி உள்ளதாகவும், பட்டாசு உள்ளிட்ட எல்லா தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக இருக்க வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது, பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாகத்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
Must Read : மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் - சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள்...
மேலும், உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களை மீட்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அரசு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடமும் வலியுறுத்தி உள்ளார். உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அழைத்து வருவதற்கான அனைத்து செலவையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளார். உக்ரைனில் உள்ள நிலைமையில் விமானங்கள் இயங்காத சூழ்நிலை உள்ளது. அருகில் இருக்கும் நாடுகளுக்கு மாணவர்களை அழைத்து சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று கூறினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.