தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘மதம் மற்றும் அடக்குமுறையின் பெயரால் கர்நாடகாவில் கலவரங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க காலடி வைக்கும் வாய்ப்பினை கொடுத்துவிட்டால் தமிழகமும் கர்நாடக மாநிலம் போல் ஆகிவிடக் கூடிய அபாயம் உள்ளது.
கொஞ்சம் கூட இடம் கொடுக்கக்கூடாது. தமிழர்களாக நாம் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பாதுகாப்பு உணர்வுடன் நாம் வாழ வேண்டும்.

தேர்தல் பிரச்சாரததில் கனிமொழி
தேசியக்கொடியை எடுத்துவிட்டு காவி கொடியை ஏற்றி அவமானப்படுத்தியவர்கள் தேசியம் பற்றி பேசுகிறார்கள். சுதந்திரப் போராட்ட வீரர்கள் பாரதியார். வ.உ.சி, வேலுநாச்சியார் புகைப்படங்கள் இடம்பெற்ற ஊர்தியை நிராகரித்து, அவர்கள் தங்களுக்கு யார் என்று தெரியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி அவமானப்படுத்தியவர்களுக்கு தயவுசெய்து வாக்களித்து விடாதீர்கள்.
ஹிஜாப் சர்ச்சைகள் தேவையற்றவை; உடை கல்விக்கு தடையாகக் கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
நாணயத்தின் இரண்டு பக்கங்கள் தான் பா.ஜ.கவும், அ.தி.மு.கவும். இரண்டு பேரும் தமிழ்நாட்டுக்கு அவமானத்தையும், கேடையும் விளைவிக்கக் கூடியவர்கள். மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் பாலமாக இருக்கக்கூடிய வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.