• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா 3வது அலையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பாஜக யாத்திரை போவது முறை கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

கொரோனா 3வது அலையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பாஜக யாத்திரை போவது முறை கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

கொரோனா 3வது அலையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பாஜக யாத்திரை போவது முறை கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

கொரோனா 3வது அலையை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், பாஜக யாத்திரை போவது முறை கிடையாது: அமைச்சர் கீதாஜீவன்

கொரோனா 3வது அலையை எதிர்பார்த்து இருக்கிறோம், உலக பொது சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பாஜக யாத்திரை போவது முறை கிடையாது என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலுடன் உள்ள மலையில் இருக்கும் சமணர்பள்ளி, வெட்டுவான் கோவில் உள்ளிட்ட பகுதிகளை பொது மக்கள் பார்ப்பதற்காக பாறை வழியாக எளிதில் ஏறுவதற்காக கைபிடி அமைக்கும் பணிகள், சுத்தகரிப்பு குடிநீர் வழங்கும் நிலையம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளது.

இதற்கான தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கழுகுமலை கழுகாசலமூர்த்தி திருக்கோவில் பக்தர்களின் நலனுக்காக சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பில் பாறையில் படிக்கட்டியில் மக்கள் எளிதில் ஏறிசெல்வதற்காக கைப்பிடி அமைக்கும் பணிகள், சுத்திகரிப்பு குடிநீர் வழங்கும் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளது.

முதல்வரின் எண்ணத்தில் உருவாகிய சீரிய திட்டமான மக்களைத்தேடி மருத்துவம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலமாக மூத்த குடிமக்கள் மற்றும் கிராம மக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தில் வாங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

72 சதவீத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது தீர்வு காண சிறப்பாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏழை, எளிய மக்களின் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும், தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் தமிழர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காக முதல்வர் அல்லும் பகலும் பாடுபட்டு வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. திருமண உதவி தொகை மற்றும் தங்கத்தின் அளவினை அதிகாரிப்பு செய்தனர். ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீட்டினை அதிமுக அரசு முறையாக செய்யவில்லை என்பதால் 3லட்சத்து 34 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இது குறித்து துறை ஆய்வில் உள்ளது. கொரோனா தாக்கத்தின் காரணமாக நேற்று ஆடி அமாவசையில் கூட திருக்கோவில்கள் மூடப்பட்டு இருந்தன.

பா.ஜ.க (மக்கள் ஆசி யாத்திரை) யாத்திரை  போவது முறை கிடையாது. அது அவர்களுக்கே தெரிய வேண்டும் என்றும், கொரோனா 3வது அலையை எதிர்பார்த்து இருக்கிறோம், உலக பொது சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 வது அலை எதிர்கொள்ள தமிழக அரசு தயராக உள்ளது என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதிக படுக்கை வசதிகள், மருத்துகள், மருத்துவ வசதி , பணியாளர்கள் நியமனம் என்று முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சூழ்நிலைகள் பா.ஜ.கவினருக்கு தெரிய வேண்டும் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: