Home /News /tamil-nadu /

டிரெய்லர்க்கே திமுக அரண்டு விட்டது, இன்னும் முழு படத்தை காண்பித்தாால் அவ்வளவு தான் - கடம்பூர் ராஜூ விமர்சனம்

டிரெய்லர்க்கே திமுக அரண்டு விட்டது, இன்னும் முழு படத்தை காண்பித்தாால் அவ்வளவு தான் - கடம்பூர் ராஜூ விமர்சனம்

கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ

Kadambur Raju | டிரெய்லர் மட்டும் தான் காண்பித்துள்ளோம்,  இதற்கே திமுக அரண்டு போய் உள்ளது. முழுபடத்தினை காண்பிக்கும் போது திரில்லா இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தான் நம்பர் -1 கட்சி என்றும், டிரைலரை மட்டும் தான் காண்பித்துள்ளோம்,  இதற்கே திமுக அரண்டு போய் உள்ளது. அதிமுக முழுபடத்தினை காண்பிக்கும் போது திரில்லா இருக்கும் என்று கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வெயில் காலத்தினை கருத்தில் கொண்டு பொது மக்கள் பயன் பெறும் வகையில் அதிமுக சார்பில் பஸ் நிலையம் முன்பு அமைக்கப்பட்டு இருந்த நீர் மோர்பந்தலை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ திறந்து வைத்தார். இதே போன்று எட்டயபுரம், விளாத்திகுளம் பேருந்து நிலையங்கள் முன்பு அமைக்கப்பட்டு இருந்த நீர், மோர் பந்தலையும் திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தான் நம்பர் -1 கட்சி. பட்ஜெட் கூட்ட தொடரில் திமுகவே பதில் செல்லமுடியாத அளவிற்கு எதிர்கட்சி தலைவர் முதல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வரை சிறப்பாக செயல்பட்டனர். தற்பொழுது நாங்க டிரைலர் தான் காண்பித்துள்ளோம், மானியக்கோரிக்கையின் போது முழு படத்தையும் காண்பிப்போம்.டிரைலருக்கே திமுக அரண்டு போய் உள்ளது. முழு படம் வரும் எவ்வளவு த்ரில்லா இருக்கும் என்பதை பாருங்கள்.

Also Read : அறிஞர் அண்ணா விருது பெற்ற ஒருவர் என்னை ஒருமையில் பேசுகிறார் - ஆளுநர் தமிழிசை வருத்தம்

மக்களின் கருத்துக்களை, இந்த ஆட்சி செய்யாத திட்டங்களை, இந்த ஆட்சியின் அவலங்களை சட்டமன்றத்தில் அதிமுக எப்படி எடுத்துரைக்கிறது என்பதனை பாருங்கள்.திமுகவிற்கு அதிமுகவை தவிர வேறு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என்றும், அதிமுக கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. நகைகடன் தள்ளுபடி பிரச்சினையில் மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர். விவசாயிகள் பலருக்கும் பயிர்காப்பீடு தொகை வரவில்லை, விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட தயராகி வருகின்றனர்.

கோவில்பட்டி நகரின் பிரதான தொழில் தீப்பெட்டி வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் எவ்வித அறிவிப்பும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டத்தினை கைவிட்டுள்ளனர்.தங்கத்தினை வைத்து அரசியல் நடத்தியவர்கள் திமுகவினர். மத்தியரசு பொருளாதார கொள்கையினால் தங்கம் விலை உயர்ந்த போது, 1980ல் நாடாளுமன்ற தேர்தலின் போது, தாலி இங்கே தங்கம் எங்கே என்று பிரச்சாரம் செய்தவர்கள் திமுகவினர்;. இன்றைக்கு வரலாறு திரும்புகிறது என்றார்.
Published by:Vijay R
First published:

Tags: ADMK, Kadambur raju, Kovilpatti, Tuticorin

அடுத்த செய்தி