முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கரிசல் மண்ணில் இருந்து இந்திய ஹாக்கி அணி... களம் காணும் தீப்பெட்டி தொழிலாளர் தம்பதியின் மகன்

கரிசல் மண்ணில் இருந்து இந்திய ஹாக்கி அணி... களம் காணும் தீப்பெட்டி தொழிலாளர் தம்பதியின் மகன்

இந்திய ஹாக்கி அணியில் களம் காணும் தீப்பெட்டி தொழிலாளர் தம்பதியின் மகன்

இந்திய ஹாக்கி அணியில் களம் காணும் தீப்பெட்டி தொழிலாளர் தம்பதியின் மகன்

Kovilpatti Hockey | இந்திய ஹாக்கி அணியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 2 தமிழக வீரர்கள் இடம்பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.

  • Last Updated :

பல வேளை உணவு கூட அருந்தமால் அந்த பணத்தினை மகனின் விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்து கண்ணீர் வடித்த காலங்களுக்கு பதில் செல்லும் வகையில் தங்களது மகன் இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வு செய்யபட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய அணிக்காக விளையாட உள்ள மாரீஸ்வரனின் பெற்றோர்கள் நெகிழ்ச்சிவுடன் தெரிவித்துள்ளனர். மாரீஸ்வரனின் பெற்றோர்கள் இருவரும் தீப்பெட்டி தொழிலாளர்கள் என்பது குறிப்பிடதக்கது.

திருவிளையாடல் படத்தில் வரும் வசனம் போல பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் கோவில்பட்டியும் ஹாக்கியும் என்று கூறலாம். ஹாக்கிபட்டி என்று அழைக்கப்படும் கோவில்பட்டி நகரில் ஹாக்கியின் பெருமை மற்றும் வரலாற்றினை ஒற்றை வரியிலோ, ஒரு வார்த்தையிலோ கூற முடியாது. களிமண், செம்மண் கலந்து புழுதி பறக்கும் மைதானம் முதல் நவீன செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் என நீண்ட நெடிய பாரம்பரியமிக்க வரலாற்று நிகழ்வுகள் உண்டு.

ஹாக்கியின் தந்தை தயான்சந்த் கோவில்பட்டியில் பயிற்சி அளித்தது, இந்திய சுதந்திரத்திற்கு முன்பே உலகில் உள்ள கவுண்டி ஹாக்கி அணியில் கோவில்பட்டி வீரர்கள் விளையாடியது, சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய அணியில் கோவில்பட்டி வீரர்கள் விளையாடியது என வரலாற்றினை சொல்லிக் கொண்டே போகலாம். கோவில்பட்டி நிறைய ஹாக்கி வீரர்கள் மட்டுமல்ல தங்களது ரத்தத்தில் ஹாக்கி விளையாட்டின் அனைத்து நுணங்களை பதிய வைத்து கொண்டு ரசிக்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏரளமாக உண்டு

பல்வேறு சிறப்புகள் வாய்ந்த கோவில்பட்டியில் கடந்த 20 ஆண்டுகாலம் ஹாக்கியில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில் கடந்த 2017ல் செயற்கை புல்வெளி மைதானமும், 2018ம் ஆண்டு சிறப்பு விளையாட்டு விடுதியும் அமைக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கோவில்பட்டி நகரில் ஹாக்கி துளிர்விட தொடங்கியது.

இதையும் படியுங்கள் : ஈட்டி எறிதலில் அன்னு ராணி தங்கம் வென்று சாதனை

கோவில்பட்டி நகர் மட்டுமின்றில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹாக்கி வீரர்கள் சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற தொடங்கினார். இதன் பயனாக 2019ல் இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு கார்த்தியும், 2020ல் மாரீஸ்வரனும் சென்றனர். இதில் ஜீனியர் உலககோப்பை ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு வரை மாரீஸ்வரன் சென்றாலும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆனால் தற்பொழுது இந்தோனிசியாவில் இம்மாதம் 29ந்தேதி முதல் அடுத்த மாதம் 1ந்தேதி வரை நடைபெறவுள்ள ஆசிய கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் மாரீஸ்வரன் மற்றும் கார்த்தி இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர்கள் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 2 வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளது தமிழகத்திற்கு மட்டுமல்ல கோவில்பட்டி நருக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

கோவில்பட்டியில் செயற்கை புல்வெளி மைதானம் மற்றும் சிறப்பு விளையாட்டு விடுதி தொடங்கிய 4 ஆண்டுகளில் 10 பேர் இந்திய அணி பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற தகுதி பெற்றது மட்டுமின்றி அதில் தற்பொழுது 2 வீரர்கள் இந்திய அணியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். மேலும் மாரீஸ்வரன் மற்றும் செல்வா என்ற 2 வீரர்களுக்கு அரசு வேலையும் கிடைத்துள்ளது.

இந்திய அணிக்காக விளையாட் மாரீஸ்வரன் கோவில்பட்டியை சேர்ந்தவர், கார்த்தி அரியாலுரைச் சேர்ந்தவர். மாரீஸ்வரன், கார்த்தி இருவரும் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதியில் பயிற்சி பெற்றவர்கள்.மாரீஸ்வரன் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து தற்போது சென்னையில் ஆக்கவுண்ட் ஜெனரல் பணி செய்து வருகிறார். கார்த்தி கோவில்பட்டி எஸ்.எஸ் துரைசாமி மாரியம்மாள்  கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த வீரர்களுக்கும் சிறப்பாக பயறிச்சி அளித்தவர் கோவில்பட்டி சிறப்பு விளையாட்டு விடுதி பயிற்சியாளர் முத்துக்குமார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படியுங்கள் :  CSK vs RCB ஆர்சிபிக்காக கோலி செய்ததை சிஎஸ்கேவுக்காக தோனி செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதில் இந்திய அணிக்காக விளையாட உள்ள கோவில்பட்டியை சேர்ந்த மாரீஸ்வரன் பெற்றோர் சக்திவேல் - சங்கரி இருவரும் தீப்பெட்டி தொழிலாளர்கள். மகனின் ஓட்டபந்தய திறனை பார்த்த சக்திவேல் தனது மகனை ஹாக்கி வீரராக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் கோவில்பட்டி மற்றும் வெளியூர்களில் நடைபெற்ற ஹாக்கி போட்டிகளை காண வைத்தது மட்டுமின்றி, மாரீஸ்வரனுக்கு ஹாக்கி விளையாட்டும் ஆர்வத்தினை ஊக்குவித்தார்.

இதன் பயனாக மாரீஸ்வரன் ஹாக்கி விளையாட ஆரம்பித்தார்;. முதலில் மாரீஸ்வரன் தாய் சங்கரி சற்று யோசித்தாலும் மகனின் விளையாட்டு ஆர்வத்தினை கண்டு ஊக்கமளிக்க தொடங்கினார். சக்திவேல், சங்கரி இருவருக்கும் தீப்பெட்டி தொழிலில் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப செலவுக்கு மட்டும்  கிடைத்த நிலையில் மிகுந்த கஷ்டங்களுக்கு இடையே வெளியில் கடன் வாங்கி மாரீஸ்வரனுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்துள்ளனர்.

 மாரீஸ்வரன் விளையாட்டு திறனை கண்டு முன்னாள் ஹாக்கி வீரர்கள், தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழகத்தினர் அவருக்கு உதவ தொடங்கியது மட்டுமின்றி விளையாட்டு ஆர்வத்தினை ஊக்குவித்த காரணத்தினால் அடுத்தடுத்த நிலைக்கு சென்றது மட்டுமின்றி இன்றைக்கு இந்திய ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ளதால் அவரது பெற்றோர் மட்டுமல்ல கோவில்பட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாரிஸ்வரன் தாய் சங்கரி

பல வேளை சாப்பிடமால் இருந்தும், வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்தும் தனது மகனுக்கு விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுத்ததாகவும், தனது மகன் இன்றைக்கு இந்த நிலைக்கு காரணம் தனது கணவர் தான் என்றும், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாரீஸ்வரன் கூறி போது தாங்கள் பட்ட கஷ்டங்கள் தான் நினைக்கு வந்ததாகவும், தொடர்ந்து விளையாடி மாரீஸ்வரன் சாதிக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறுகிறார் அவரது தாய் சங்கரி

ஒரு ஓட்டபந்தயத்தில் பெற்ற வெற்றி தான் மாரீஸ்வரனை ஹாக்கி வீரராக உருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாகவும், அதற்கு பலரும் உதவியதாகவும், தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வாடகை வீட்டில் குடியிருந்து வருவதாகவும், இருந்தாலும் தனது எண்ணத்தினை நிறைவேற்ற வேண்டும் என்ற வகையில் ஊக்கம் கொடுத்தால் மாரீஸ்வரன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இன்னும் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் இந்திய அணியில் மாரீஸ்வரன் விளையாட வேண்டும் என்றும், முதன் முதலில் மாரீஸ்வரன் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தியது நியூஸ் 18 தான் என்று கூறுகிறார் அவரது தந்தை சக்திவேல்

தன்னிடம் பயற்சி பெற்றவர்கள் இந்திய அணிக்கு போக வேண்டு;ம் என்பது தான் பயிற்சியாளர்கள் ஆசையாக இருக்கும், அதனை இன்றைக்கு மாரீஸ்வரன், கார்த்தி இருவரும் நிறைவேற்றியுள்ளனர். இது இங்கு பயிலக்கூடிய மற்ற வீரர்களுக்கு மேலும் ஊக்கத்தினை தரும், நிறைய வீரர்கள் இங்கிருந்து இந்திய ஹாக்கி அணிக்கு செல்வார்கள் என்கிறார் ஹாக்கி பயிற்சியாளர் முத்துக்குமார்

மாரீஸ்வரன், கார்த்திக் இரண்டு பேரும் நல்ல வீரர்கள், சிறப்பாக விளையாடுவர்கள், எங்கள் நண்பர்கள் இந்திய அணிக்கு விளையாடுவதும் தங்களுக்கும் உத்வேகம் அளிப்பதாகவும், நல்ல மைதானம், நல்ல பயிற்சியாளர் கிடைத்த காரணத்தினால் சிறப்பாக தாங்கள் விளையாடி வருவதாகவும் கூறுகிறார் மாரீஸ்வரன், கார்த்தியுடன் பயிற்சி பெற்ற ஹாக்கி வீரர் முகம்மதுயாசின்

கொரோனா காலத்தில் மாரீஸ்வரன் குடும்பம் மிகுந்த கஷ்டத்தினை சந்தித்தனர். அப்போது எங்களால் முடிந்த உதவிகளை செய்தோம், மாரீஸ்வரன் பெற்றோர் தீப்பெட்டி தொழிலாளர்கள், கார்த்தி தந்தை ஏடிஎம்மில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையில் இருந்த குடும்பங்களை சேர்ந்த வீரர்கள் இன்றைக்கு இந்திய அணியில் விளையாட தேர்வு செய்யப்பட்டது மகிழ்சி அளிப்பதாகவும், மேலும் பல வீரர்கள் கோவில்பட்டியில் இருந்து உருவாக உத்வேகம் அளிக்கும் என்கிறார் தூத்துக்குடி மாவட்ட ஹாக்கி கழக செயலாளர் குருசித்ர சண்முகபாரதி

இந்திய அணிவுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து மாரீஸ்வரன் கூறுகையில் பல்வேறு கஷ்டங்களை கடந்து இன்றைக்கு இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பலரும் தனக்கு உதவி செய்ததாகவும், கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், நம்மை வெற்றி பெற கடைசி வரை உழைக்க வேண்டும், தற்பொழுது நடைபெறவுள்ள ஆசியா கோப்பையில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டியில் ஆட வேண்டும் என்பது தனது ஆசை என்றும், தன்னுடன் விளையாடிய அனைத்து நண்பர்களும் பல்வேறு வகையில் உத்வேகம் அளித்தாகவும், தனது பயிற்சியாளர் முத்துக்குமார் சிறப்பாக பயிற்சி அளித்ததாக கூறியுள்ளார்.

மற்றொரு வீரர் கார்த்தி கூறுகையில்,  இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மகிழச்சி அளிப்பதாகவும், சிறு வயதில் இருந்த ஆசை விளையாட்டு விடுதிகளில் தங்கி தான் படித்து வந்தாகவும், கோவில்பட்டியில் கிடைத்த பயிற்சி போன்று தான், இந்திய அணியில் அளிக்கப்படும் பயிற்சி அளிக்கப்படுவதாகவும், கோவில்பட்டியில் நிறைய விளையாட்டு உபகரணங்கள் இல்லை, அது கிடைத்தால் பலர் இந்திய அணிக்கு விளையாட வருவார்கள். தனது பெற்றோர் மகிவும் கஷ்டப்பட்டதாகவும், ஒலிம்பிக் போட்டியில் விளையாட வேண்டும் என்றார்.

top videos

    20 ஆண்டுகளுக்கு பின்னர் எவ்வித பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து 2 வீரர்கள் இந்திய ஹாக்கி அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளது ஒட்டுமொத்த தமிழக மக்களும் இன்றைக்கு கொண்டாடடி வருகின்றனர்.

    First published:

    Tags: Hockey, Kovilpatti