தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் முன்னாள் இராணுவ வீரர்கள் கட்டடித்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் கலந்து முன்னாள் இராணுவ வீரர்களுடன் கலந்துரையடினர்.
இதன் பின்னர் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில், என்னுடைய மூத்த மற்றும் இளையசகோதரர்கள் இராணுவத்தில் பணிபுரிந்தனர். நானும் இராணுவத்தில் பணியாற்றியுள்ளேன்.
Also read: என் மீது தவறு இல்லை.. பழிவாங்கும் நோக்கில் கைது நடவடிக்கை: நீதிமன்றத்தில் குமுறிய மீரா மிதுன்!
நம் உயிரை காப்பாற்றுவது அரிசி, பருப்பு கிடையாது, இராணுவ வீரர்கள் தான், எல்லையில் தங்களது உயிரை பணயம் வைத்து நம்மை காப்பாற்றுகின்றனர். ஆகையால் தான் அவர்கள் அணிந்து இராணு உடுப்புக்கு மரியாதை தருகிறோம்.
எந்த கவலையும் இல்லமால் நாம் இங்கு உட்கார்ந்து இருக்கிறோம், ஆனால் இராணு வீரர்கள் சாப்பிட்டார்களா, தூங்கினார்களா என்று தெரியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆனால் இராணுவ வீரர்கள் இரவு பகலாக கண்விழித்து ஆயுதம் தாங்கி நம்மை பாதுகாத்து வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருக்கவேண்டும் என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.