Home /News /tamil-nadu /

செல்போன் பேச்சால் ஆத்திரம்.. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்

செல்போன் பேச்சால் ஆத்திரம்.. திருமணமான 5 மாதத்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்

இளம்பெண் கொலை

இளம்பெண் கொலை

Tuticorin Murder | திருமணமான 5 மாதத்தில் மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்

    தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்

    தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பொன்ராஜ்( வயது 25). இவருக்கும் தாளமுத்து நகர் அருகே உள்ள பாலதண்டாயுத நகரைச் சேர்ந்த மாரிச்செல்வி (வயது 19) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  மாரிச்செல்வி அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டே இருப்பாராம். இதை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொன்ராஜ், மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டு விட்டாராம்.

    Also Read: அமைச்சர் சேகர்பாபு மகள் காதல் திருமணம்.. பாதுகாப்பு கோரி பெங்களூரு போலீஸ் கமிஷனரிடம் மனு

    சில நாட்களுக்கு பின்னர் மாரியம்மாள் மருமகன் பொன்ராஜிக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாராம். ஆனால், அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் பொன்ராஜ் நேற்று நள்ளிரவு  தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மாமியார் வீட்டிற்குச் சென்று மாரிச்செல்வியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    Also Read : கணவனின் சித்தி மகனுடன் மனைவி உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவன் மண்டையை உடைத்த கள்ளக்காதலன்

    வாக்குவாதம் முற்றியதையடுத்து சுடிதார் சாலால் மாரிச்செல்வி யின் கழுத்தை இறுக்கி தலையில் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார். இதனை தடுக்க முயன்ற மாமியார் மாரியம்மாளை கையில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டனர்.
    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த  தாளமுத்து நகர் போலீசார் பொன்ராஜ் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: முரளி கணேஷ் ( தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Crime News, Death, Husband Wife, Murder, Tuticorin

    அடுத்த செய்தி