ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீச்சு : கணவர் வெறிச்செயல்!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீச்சு : கணவர் வெறிச்செயல்!!

தூத்துக்குடி அரசு மருத்துவமனை

தூத்துக்குடி அரசு மருத்துவமனை

சூசை மச்சாதுவை அவருடைய மகன் கெர்பின் வழக்கம் போல் கூப்பிட வரும் பொழுது அவன் மீதும் ஆசீட்டை ரவி வீசி உள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  தூத்துக்குடியில் நடத்தையில்  சந்தேகப்பட்டு மனைவி உட்பட 3 பேர் மீது ஆசிட் வீசிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  தூத்துக்குடி அசோக் நகர் 8வது தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் ரவி (50) இவரது மனைவி மாலா (49). ரவி - மாலா தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர். மகளுக்கு சில நாட்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

  ரவி சிப்காட் பகுதியில் இரண்டு சக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக ரவி வீட்டில் குடும்ப உறுப்பினர் போல் தூத்துக்குடி பி.அன்.டி காலனி பகுதியைச் சேர்ந்த சூசை மச்சாது (48) என்பவர் பழகி வந்துள்ளார்.

  Also Read:  தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வான வீரரின் மூக்கு, வாயை துண்டாக்கிய மர்ம நபர்! - சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..

  சூசை மச்சாது பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வருகின்றார். ரவியின் மூத்த பொண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இதற்கான அனைத்து செலவுகளும் சூசை மச்சாது செய்துள்ளார். இதில் ரவியை கடமைக்கு மட்டும் தான் பயன்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நேற்று அசோக்நகரில் உள்ள வீட்டில், சூசை மச்சாது - மாலா இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த ரவி இரண்டு சக்கர வாகனத்திற்கு பெயிண்ட் அடிக்க பயன்படுத்தப்படும் ஆசீட்டை சூசை மச்சாது - மாலா இருவரது முகத்திலும் வீசி உள்ளார்.

  Also Read:  சந்திர பிரியங்கா: புதுச்சேரியில் 40 வருடங்களுக்கு பின் அமைச்சராகியிருக்கும் 2வது பெண்!

  சூசை மச்சாதுவை அவருடைய மகன் கெர்பின் வழக்கம் போல் கூப்பிட வரும் பொழுது அவன் மீதும் ஆசீட்டை ரவி வீசி உள்ளார். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களுடைய சத்தம் கேட்டு அருகில் வீட்டில் இருந்தவர்கள் வர ரவி அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

  மேலும் ஆசீட் வீச்சில் மாலாவுக்கு உடல் பகுதியிலும், சூசை மச்சாது கண்ணிலும் அவரது மகன் கெர்பினுக்கு நெஞ்சு பகுதியில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள்  மூவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், தூத்துக்குடி சிப்காட் காவல் ஆய்வாளர் வேல்முருகன் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ரவியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

   

   முரளி கணேஷ், தூத்துக்குடி செய்தியாளர் 

  Published by:Arun
  First published:

  Tags: Acid attack, Crime | குற்றச் செய்திகள், Govt hospital, Tuticorin