Home /News /tamil-nadu /

வீட்டின் மேற்கூரை இடிந்து 8 மாத கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்

வீட்டின் மேற்கூரை இடிந்து 8 மாத கர்ப்பிணி உட்பட 2 பேர் உயிரிழப்பு - தூத்துக்குடியில் சோகம்

தூத்துக்குடி

தூத்துக்குடி

Thoothukudi | தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 8 மாத கர்ப்பிணி பெண் உள்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

    தூத்துக்குடி அண்ணாநகர் 3வது தெருவில் வசித்து வருபவர் கூலித்தொழிலாளி முத்துராமலிங்கம். இவரது மனைவி காளியம்மாள். இவரது மகள் காத்தம்மா என்ற கார்த்திகா. இவர் 8 மாத கர்ப்பிணி கடந்த வாரம் தான் இவருக்கு சீமந்தம் செய்து தாய் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். நேற்று இரவு வழக்கம்போல் இரவு உணவு அருந்தி விட்டு வீட்டில் துவங்கியுள்ளனர்.

    முத்துராமலிங்கத்தின் தாய் காத்தம்மாள் (75) வீட்டில் வெளிப்பகுதியில் உள்ள சிறிய வீட்டில் தூங்கியுள்ளார். அதிகாலை இரண்டரை அளவில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. காலை 4 மணிக்கு மூதாட்டி காத்தம்மாள் சிறுநீர் கழிக்க எழுந்த போது காப்பாத்துங்கள், காப்பாத்துங்கள் என்ற முத்துராமலிங்கத்தின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தைக் கேட்ட மூதாட்டி அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளின் கதவைத் தட்டி அலறல் சத்தம் கேட்கிறது, கதவை திறக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Also Read: காதலியை அழைத்து செல்ல பைக் வேணும்.. தந்தை மறுத்ததால் இளைஞர் தற்கொலை - செங்கல்பட்டில் விபரீதம்

    இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டின் கதவை திறந்து பார்த்த பொழுது மேற்கூரை இடிந்து விழுந்தது தெரியவந்தது. லேசான காயம் பட்டிருந்த முத்துராமலிங்கத்தை மட்டும் மீட்டுள்ளனர். மற்ற இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்ததால் மீட்க முடியவில்லை .இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் இருவரையும் மீட்டனா். அவர்கள் இருவரையும் உயிரிழந்த நிலையில் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீடு பழைய வீடு என்பதாலும் வீட்டின் மேற்கூரையில் ஓடு உள்ளிட்டவைகள் வைத்திருந்ததால் எடை தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது தெரியவந்துள்ளது
     
    செய்தியாளர் : பி. முரளி கணேஷ் (தூத்துக்குடி)
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Death, Pregnant, Tamil Nadu, Tamil News, Thoothukudi

    அடுத்த செய்தி