வடகறிக்கு உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மேலாளர் கைது
வடகறிக்கு உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மேலாளர் கைது
பாலமுருகன், வெள்ளையன்
திருச்செந்தூர் தெற்குப் புதுத் தெருவைச் சேர்ந்த வெள்ளையன்(56), திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதே ஹோட்டலில் திருச்செந்தூர் பி.டிஆர். நகரைச் சேர்ந்த பாலமுருகன் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
திருச்செந்தூரில் வடகறிக்கு உப்பு அதிகமானதால் சமையல் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ஹோட்டல் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் தெற்குப் புதுத் தெருவைச் சேர்ந்த வெள்ளையன்(56), திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வடக்கு டோல்கேட் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் சமையல் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இதே ஹோட்டலில் திருச்செந்தூர் பி.டிஆர் நகரைச் சேர்ந்த பாலமுருகன் மேலாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலை 07.30 மணிக்கு வெள்ளையன் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டு இருந்த போது அங்கு வந்த மேலாளர் பாலமுருகன் வடகறியை சாப்பிட்டுவிட்டு உப்பு அதிகமாக உள்ளதாக வெள்ளையனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு வெள்ளையன் நான் இப்பதான் டேஸ்ட் பண்ணி பார்த்தேன் உப்பு சரியாகத்தானே உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேலாளர் பாலமுருகன், மாஸ்டர் வெள்ளையனை என்னையே எதிர்த்து பேசுகிறாயா என்று கூறி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சூடு எண்ணையை ஒரு சில்வர் கப்பில் கோரி வெள்ளையன் மீது ஊற்றியுள்ளார்.
இதனால் வெள்ளையனைக்கு முகம், தலை, வலது தோள்பட்டை, முதுகு ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இனிமேல் உன்னை ஹோட்டல் பக்கம் பார்த்தால் எண்ணெய் சட்டிகுள் முக்கி கொன்றுவிடுவேன் என்று வெள்ளையனை பாலமுருகன் மிரட்டியுள்ளார்.
காயமடைந்த வெள்ளையன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெள்ளையன் கொடுத்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-செய்தியாளர்: முரளி கணேஷ்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.