• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கோவில்பட்டியில் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம் - கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதி

கோவில்பட்டியில் வெள்ளத்தால் மூழ்கிய தரைப்பாலம் - கிராம மக்கள் வெளியேற முடியாமல் அவதி

மழை வெள்ளம்

மழை வெள்ளம்

எட்டயபுரம் அருகே மழைவெள்ளத்தால் தரைப்பாலம் மூழ்கியதால் பொதுமக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
கோவில்பட்டி அருகே ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால்  தரைப்பாலம் மூழ்கியதையடுத்து கிராமத்தை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆர்.வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்வதற்கு தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தான் ஊருக்குள் செல்லவோ, வெளியே வரவோ முடியும். இந்த சாலை பகுதியில் உள்ள ஓடையை கடப்பதற்காக ஒரு தரைப்பாலம் உள்ளது.

இந்த தரைப்பாலம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து விட்டது.மேலும், மழைக்காலங்களில் இந்த ஓடையில் அதிகளவு நீர் வரத்து செல்லும் காலங்களில் பொது மக்கள் ஊருக்குள் செல்லவோ, வெளியேறவோ முடியாத நிலை உள்ளது. தரைப்பாலத்துக்கு பதிலாக மேம்பாலம் கட்டிதர வேண்டும் என்று 20 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை முதல் அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக நேற்று நள்ளிரவு முதல்  ஓடையில் மழை நீர் வரத்து அதிகரித்த காரணத்தால் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், கிராம மக்கள் பாலத்தை கடக்க முடியமால் தவித்து வருகின்றனர். அவசர தேவைக்காக வேறு வழியில்லமால் தரைப்பாலத்தில் ஓடும் நீரில் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் மறுபகுதிக்கு கடந்து செல்லும் நிலை உள்ளது.

இரு சக்கர வாகனங்கள் பல மணி நேரம் காத்திருந்து தண்ணீர் மட்டம் குறைந்த பிறகே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த ஒரு சாலையை தவிர கிராமத்திற்கு செல்ல வேறு வழி இல்லை என்பதால், பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தங்கள் மக்கள் அவதிப்படும் நிலை தொடர்கதையாகியுள்ளது. இப்பிரச்னைக்கு மேம்பாலம் அமைப்பது ஒன்றுதான் நிரந்தர தீர்வு. எனவே மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற முன் வரவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: