ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தரவில்லை என்பதால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பட்டாதரி இளைஞர் சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை கிராமத்தினை சேர்ந்தவர் மாடசாமி. இவர் சென்டிரிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா, இந்த தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் (22) என்ற 2 மகன்கள். இதில் விக்னேஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பிரகாஷ் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி கணிதம் முடித்து விட்டு வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் தனது தந்தையுடன் சென்டிரிங் வேலைக்கும் சென்றுள்ளர். மேலும் அவ்வப்போது தனது தந்தை, தாய், சகோதாரன் ஆகியோரிடம் இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும் என்று பணம் வாங்கியுள்ளார். சென்டிரிங் வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பணத்தினையும் வீட்டிற்கு தரமால் இருந்துள்ளார்.
இதையும் படிங்க: 3வது பெரிய கட்சியா? பல இடங்களில் டெபாசிட்டே காலி.. பாஜக மீது திருமாவளவன் விமர்சனம்
மேலும் எப்போதும், செல்போன் கையுமாக இருந்துள்ளார். இது தவிர வீட்டில் இருந்த பணத்தினையும் யாரூக்கும் தெரியமால் எடுத்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 25ந்தேதி தனக்கு அவசரமாக 10 ஆயிர ரூபாய் பணம் வேண்டும் என்று தனது தாய் கீதாவிடம் பிரகாஷ் கேட்டுள்ளார். அப்போது எதற்கெடுத்தாலும், பணம், பணம் ஏன் கேட்கிறாய். இதுவரை வாங்கிய பணத்தினை என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பியது மட்டுமின்றி இனி பணம் கிடையாது, ஒழுங்காக வேலைக்கு போ என்று கீதா திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிராகஷ், வீட்டிற்குள் சென்று அங்கிருந்த சேலையை எடுத்து வீட்டின் பணங்கட்டையில் போட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளார். தூக்கிட்டு உயிருக்காக போராடி கொண்டு இருப்பதை பார்த்த பிரகாஷ் பெற்றோர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதையும் படிங்க - அரசு சார்பில் மகா சிவராத்திரி விழாவா? இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்புக்கு விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு
இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலன் இல்லமால் உயிரிழந்துவிட்டார். இதையெடுத்து தருவைக்குளம் போலீசார் பிரகாஷ் உடலை உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாக பிரகாஷ் ஆன்லைனில் ரம்மி விளையாடி , அதற்கு அடிமையாக இருந்தது தெரியவந்துள்ளது.
சுமார் 3 லட்ச ரூபாய் வரை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற அன்றும் ஆன்லைன் ரம்மி விளையாட தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்து திட்டி விடவே, தற்கொலை முடிவினை கையில் எடுத்தது தெரியவந்துள்ளது. பட்டதாரி இளைஞரான பிரகாஷ் சிறந்த கிரிக்கெட் வீரராகவும் இருந்துள்ளார்.
நல்ல வேலைக்கு செல்வார் என்று ஆவலாக பெற்றோர் ஆவலாக எதிர்பார்த்து இருந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையாகி தனது உயிரை இழந்துள்ளார். பிரகாஷ் உயிரிழப்பு கடைசியாக இருக்கட்டும், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டினை தடை செய்ய வேண்டும் என்று பிரகாஷ் குடும்பத்தினர் கோரிக்ககை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.