முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பக்ரீத், ஆடியை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்த கிடாய் ஆடுகள்: ரூ.4 கோடிக்கு விற்பனை

பக்ரீத், ஆடியை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்த கிடாய் ஆடுகள்: ரூ.4 கோடிக்கு விற்பனை

பக்ரீத், ஆடியை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்த கிடாய் ஆடுகள்: ரூ.4 கோடிக்கு விற்பனை

பக்ரீத், ஆடியை முன்னிட்டு எட்டயபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்த கிடாய் ஆடுகள்: ரூ.4 கோடிக்கு விற்பனை

கடந்த 1 வருடத்திற்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சரி வர சந்தைகள் நடைபெறவில்லை என்பதால், ஆடுகள் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பக்ரீத், ஆடியை முன்னிட்டு பொட்டு, மயிலை, நாடு, செம்மறி என எட்டயபுரம் சந்தையில் விற்பனைக்கு வந்த கிடாய் ஆடுகள் ரூ.4 கோடி ரூபாய் விற்பனையாகி உள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையும் ஒன்று. இச்சந்தையில் விரும்பும் இன ஆடுகள்,  திரட்சியான உடல் அமைப்புடன் கிடைப்பது மட்டுமல்லாமல், விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, கோவை, சிவகங்கை, சென்னை, நெல்லை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்டு வியாபாரிகளும் பொது மக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டுச் சந்தையில் சராசரியாக 2,000  முதல் 3,000 ஆடுகள் வரை விற்பனையாகி வருகிறது. தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இந்தச் சந்தையில் ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2மாதங்களாக மூடப்பட்டு இருந்த ஆட்டுச்சந்தை கடந்தவாரம் மீண்டும் திறக்கப்பட்டது. முதல்வாரம் என்பதால் விற்பனை சுமராக இருந்தது. இந்நிலையில் வரும் புதன் கிழமை பக்ரீத் என்பதாலும், இன்று ஆடி பிறந்துள்ள காரணத்தினாலும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தை மீண்டும் வழக்கமான சூழ்நிலையில் களை கட்டியது.

Also read: வேலூர் அருகே 16 வயது சிறுமியுடன் 41 வயது ஆணுக்கு திருமணம்: பெண்ணின் தந்தை, புதுமாப்பிள்ளை கைது!

பக்ரீத், ஆடி ஆகியவற்றை கருத்தில் கொண்டு வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடு கிடாய்கள் வரத்து அதிகமாக இருந்தது. சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 4 ஆயிரத்திற்கும் மேல் கிடாய் ஆடுகள் தான் அதிகமாக காணப்பட்டது. கடந்த 1 வருடத்திற்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக சரி வர சந்தைகள் நடைபெறவில்லை என்பதால், ஆடுகள் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

சாதரணமாக 15 கிலோ முதல் 40 கிலோ வரையிலான ஆடுகளும், ஆளின் இடுப்புளவு உயரமுள்ள கிடாரி ஆடுகளும் விற்பனைக்கு வந்து இருந்தன. கடந்த வாரத்தினை விட பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கிடாய் ஆடுகளை தான் பொது மக்கள் அதிகளவில் விரும்பி வாங்கினர். 15 ஆயிரம் ரூபாய் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கிடாரி ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.

பொட்டு, மயிலை,  நாடு, செம்மறி என கிடாய் ஆடுகளை அதிகளவில் பொது மக்கள் வாங்கி சென்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் 5 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு கொரோனா பாதிப்பு மற்றும் ஆடுகளில் விலை உயர்வு காரணமாக விற்பனை மந்தமாக தான் இருந்தது.

Also read: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை ரூ.50 வரை உயர்கிறது!

ஆனால் கடந்த வாரத்தினை விட இந்த வாரம் ஆடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. வழக்கமாக காலையில் ஆடுகள் விற்பனை தொடங்கியதும், விற்பனையாகி விடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு சற்று மந்தமாகவே விற்பனை தொடங்கியது. சுமார் 4 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்று இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

பக்ரீத், ஆடி என்பதால் ஆடுகள் விற்பனை அதிகமாக இருந்ததாகவும், பக்ரீத் பண்டிகை புதன் கிழமை என்பதால் செம்மறி கிடாய்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாகவும், ஒரு கிடாய் ஆடு 40ஆயிரம் வரை விலை போனதாகவும், கடந்த வாரத்தினை விட இது அதிகம் என்பதால் மகிழ்ச்சி என்றும், தான் 30 ஆடுகள் வரை கொண்டு வந்து விற்பனை செய்துள்ளதாகவும், தனக்கு ரூ.5லட்சம் வரை லாபம் கிடைத்துள்ளதாக கூறுகிறார் சிவகாசியை சேர்ந்த ஆட்டு வியாபாரி சந்திர சூரியன்.

First published:

Tags: Tuticorin