மகளின் காதலுக்கு உதவிய தாயை கொன்ற தந்தை - தூத்துக்குடியில் கொடூரம்

கோப்புப் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளை, அவர் விரும்பிய நபருக்கே திருமணம் செய்து வைத்த தாயை, தந்தையே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

 • Share this:
  தூத்துக்குடி நடராஜபுரம் 2-வது தெருவைச் சேர்ந்த முனியசாமி-முருகலட்சுமி தம்பதியின் மகளுக்கு கடந்த 26-ம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தம்பதியின் மகள் வேறொருவரை காதலித்தது தாய் முருகலட்சுமிக்கு தெரியவந்தது. இதையடுத்து மகள் விரும்பிய நபரையே முனியசாமிக்கு தெரியாமல் முருகலட்சுமி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி தெற்கு கல்மேட்டில் இருந்து துரைசாமிபுரம் செல்லும் பகுதியில் ஒரு பெண்ணி்ன் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

  இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இறந்த பெண் முருகலட்சுமி என்பதும் அவரது கணவர் முனியசாமியே கொலை செய்ததும் தெரியவந்துள்ளது. கொலை செய்ததுடன் நண்பர்களின் உதவியுடன் முனியசாமி உடலை எரித்துள்ளார். இது தொடர்பாக 6 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராஜ், சங்கர், நீலமேகம், மற்றும் தெற்கு கல்மேடை சேர்ந்த முத்துச்செல்வம் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள முனியசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

  மேலும் படிக்க...Tamil nadu election results 2021 | திருச்சி: வாக்கு எண்ணிக்கை மையத்தில் காற்றில் பறக்கவிடப்படும் தனி மனித இடைவெளி..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: